Tuesday, October 30, 2012

உன் சம்பாஷணைகளும் மூன்று மீள் நினைவுகளும்

உன் குடியிருப்பு
என் பால்யகால கழிந்த பகுதி
நான் ஒடி ஒய்ந்த
தெருக்களை
மீள் நினைவாக்கினாய்
.
ஒரு திருமண கூடல் நாளில்
மலையருவி கோயிலுக்கு
தோழியின் திருமணத்திற்கு
சென்று பின்
நிகழ்ந்த சம்பாஷணைகள்
மலையருவியின் தாளத்தையும்
குளிர்வையும்
அதே கோயிலின்
மணியோசையையும்
மனம் அகலாதவாறு
மீள் நினைவாகினாய் . . .
.
உன் கரிசனை
மிதக்கும் முகத்தில்
உன் பெரிய கண்களில்
உன் நடத்தைகளில்
என்னுடைய
பால்ய கால
நண்பன் ஒருவன்
அசப்பை காண்கிறேன்
அவனோடு கழித்த நாட்களை
பட்டை தீட்டி
மீள் நினைவாக்கினாய் ...


Monday, October 1, 2012

ஷேவிங் லோஷன்

பனிபொழிவு கறுப்பு
சிப்பாய்களை வீழ்த்தும்
நுரை தூரிகையுடன்
கண்ணாடியில் முகம் பார்த்து நிற்பேன்
.
பனியுதிர்ந்த
என் ஆடையோ
நிலமோ
காற்று உலர்த்துமே

தூரித உணவுகளோடு அவள்

அவளோடு பழக்கம்
ஏற்பட்டிருந்தின் ஒரு பொழுதில்
தன் தந்தை வாங்கி வந்த
தூரித உணவுகள்
திறந்து வைத்து காத்திருக்கேன்
சாப்பிடுவதற்காக என
குறிப்பிட்டாள்
.
அவளொடு பழக்கங்கள்
நீண்ட பின்
பாலித்தீன் உணவு பொட்டலங்களோடு
திரும்பிய
ஒரு மாலை பொழுதில்
"நீ தூரித உணவுகள்
சாப்பிட வேண்டி
நான் காத்திருக்கேன் "
என்றேன் .
...
"அவளுக்கு ஒன்றும்
புரியவேயில்லையாம் "

உன்னை மீள் வாசிப்பை

விருப்பமும் யாசிப்பும்
கூடி தளர்ந்த பின்
பிற அலுவல்களால்
உன்னோடு நிகழ்வுகள் பெரிதாக
கவனிப்பை பெறுவதில்லை
உன் சிணுங்கல்கள்
எரிச்சல் மூட்டுகிறது
உன் நடத்தைகளில்
குறை ஒதுக்கிறேன்
உன்னை கொண்டாடிய
பொழுதுகள் மீள்வதை
ஒருபோதும் நான்
விரும்புவதாயில்லை
உற்சாகத்த காதலை
மிச்சம் வைக்க கூடாதென்று
மனவற்புறுத்தல்
களைக்கிறது
இரவல் வாங்கிய
புத்தகமென நீ
ஒன்று திரும்ப வாசிக்க வேண்டும்
அல்லது தூக்கி
தர வேண்டும்

உன்னை அறியமால்

உன்னை அறிய முடியமால்
ஒத்திகைகளிலே கழிகிறது
காலம்
.
நீயும் கலைக்கிறாய்
ஒழுங்குபடுத்துவதில்லை
நாம் நிகழ்வுகளை
.
எப்போழுதோ முடிவு செய்யபட்டது
"இன்னும் கொஞ்சம்
நாள் ஆகும்
உன்னை புரிந்துக்கொள்வதற்கு "
இன்னும் தொடர்கிறது
.
வண்டிகள் இழுக்கும்
மாடுகள்
வழி அறியாததென
யாரோ நம்மை
வழியில் செலுத்திக்
கொண்டிருக்கலாம்.

உன் தொடர்புபியல்

சிறு கிளை மரத்தின்
நிழலில் அமர்ந்திருந்து
வெளுத்த வெயிலை
பார்க்கும் கனவுகள்
.
திட்டுதிட்டாய் நகர்ந்து
வரும் உதிர்க்கும்
என் கனவுகளை
சல்லடை போடுபவன்
உன் தொடர்புபியல் பற்றி
ஆராயலாம்

எழுத்து

சில பேரின் கைகளில்
ரீங்காரமிடம் வண்டுகள்
மாட்டிய அவதி
.
சில பேரின் கைகளை
நத்தை கயிறு கட்டி
இழுக்கிறது
.
வானம் வெட்டி
பிழிந்து துளிகளால்
காகிதத்தில்
கிறுக்கபவை எவை

spoon song

Spoon song
"ding ding ding ding
dig dig dig dig "
....
" where is it ?"
" in the cup "
"either "
" in the vessel "
......
" i hate food "
" no taste "
" mix one more "
......
" i hate you "
" some times you missed food "
" better her hand "
"i missed her love "
"when she is using you "
" compell to eat "

கிழட்டு மரம்

குறுகி விட்டது மரம்
பின் கிளைகளில் மட்டும்
பட்டையான தடித்த இலைகள்
கரு நீல நிறத்தில்
கிளை பட்டைகள்
தொட்டு விட்டால்
உதிர்ந்து விடும்
ஒப்புக்காக சில பூக்கள்
கிழட்டு மரம்
தூக்கி ஏறிந்துவிட
வேண்டியதுதான்