Monday, April 28, 2014

முகப்பருக்களால் காதல் . . .

உன்னிடம் இரண்டு முகப்பருக்கள். முகம் கழுவும் போது , சோப்பு தேய்க்கையில் வலி ஏற்படுத்துவதாய் உன் முகப்பருக்கள். தொட்டால் ஆ வென வலியால் கைகளை உதறுகிறாள். உன் சமையலில் நீ சேர்க்கும் சுவையைகூட்டும் மசாலாக்களால் உனக்கே பாதிப்பு. உன் பருக்கள் பழுக்கும். கன்னத்தில் முத்தங்கள் வேண்டாம் என்கிறாய். காய்ந்த பருக்களை மென்மையாக முத்தமிடுக்கிறேன். பருக்களுக்கான முத்தம். வலிக்கும் டா ப்ளிஸ் என்கிறாய். திரும்ப ஒரு முறையாயவது தருகிறேன். பொறுத்துக்கொள். உனக்கு வலி யில்லமால் , கன்னங்களால் தீண்டி முகப்பருக்களை எனக்கு மாற்ற முனைக்கிறேன்.

Sunday, April 27, 2014

அனுவிலிருந்து . . . .

சில கணங்கள் நிற்கும் பேருந்து நிறுத்தத்தில் நீ அமர்ந்திருந்திருப்பாய் நான் அமர்ந்திருக்கும் இருக்கை கண்ணாடி சாளரத்தின் வழியே என் பார்வை உன்னை தரிசிக்கிறது நொடிகளை வீணாக்கதவாறு இப்பொழுதே பார் என்னை ஏதோ செய்கிறது நாளை இது நடக்கமாலும் போகலாம் என்ற கெட்ட எண்ணம் நிலையகுலைய செய்ய யாரேனும் என் முன்பு உன்னை மறைந்தால் இந்த காதலில் ஏதோ அபசகுனம் நடந்து விட போவதாக அவநம்பிக்கை ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் என் தேகத்தில் எங்கேயும் கீறினால் துளிர்க்கும் இரத்தத்தில் ஒவ்வொரு அணுவும் உன் பெயர் சொல்லும் அனு எதுவும் தெரியாது இந்த பிரபஞ்சத்தில் இல்லாததாகவும் தேக மரமரத்து போய் மீள்வதற்குள் இவள் பெண்ணா ? ஏதேனும் அற்புதமான ஒன்றா ? மூடி அகன்ற கள்ளு பானையா ? அவள் அந்த வாசனை என்னை மயக்கி போதையின் உச்சத்தின் தலைக்கேரி போதும் யென கொஞ்சலோடு பிடிக்கி அடைத்து வைத்து நான் கெஞ்ச இந்த ஒரு முறை உன்னை முகர்ந்து திழைக்கிறேன் அடுத்த முறை மரணம் என்னை சப்பி போட்டாலும் பரவாயில்லை டேலியாவின் ஒவ்வொரு இதழ்களாக பிடிக்கி வரும் காற்றில் என் நாசியை தொடும் வாசம் அனு நீ இந்த புலம் காலை ஏன் இத்தனை மயக்கம் நிலத்தில் கால்களை ஊன்றி அமர்ந்திருந்திலாய் உன் பாதங்கள் இருக்கம் உணர ஊசி மருந்து செலுத்தி வலி குறையுமே அதே போல் உன் பாதங்களை என் இதழ்களால் நீவி பஞ்சு தேய்த்தலை போல் இனி வலி இருக்கம் ஏற்படமால் செய்ய நான் வரவா நீ இப்பொழுது ஒப்பனைகள் செய்து இருக்கிறாய் தனி அறைக்கு என்னை இழுத்து சென்று உன் மூக்குத்தியை கழட்டி என் கைகளில் கொடுத்து விட்டு இது தான் என் நாசியின் முழு உருவம் யென்று தொடர்ந்து வந்த கொஞ்சல்களை என் மீது திணித்தால் நான் மரணிப்பேனா அது ஜனனமா அப்போது என் உயிர்சக்தியை பிடிங்கி விடு அந்த கனங்கள் எனக்கு போதும் இனி இதை விட அரிய நாள் இனி வாய்க்காது மேன்மை வழியும் உன் வதனம் சில சொற்கள் பிறக்கும் உன் உதடுகளிலிருந்து இப்போதே என்னை கொஞ்சி தீர் என் புருவங்கள் கன்னங்கள் நெற்றி நாசி தாடை கழுத்து வளைவு முடிந்தளவு உன் இதழ்களால் செய்ய முடிந்ததை செய்துக் கொள் என்று சொன்னால் என் உயிர் அனுவே நான் என்ன செய்வேன் முத்த விளையாட்டின் வழி இந்த உலகத்திலே பெரிய காதல் அரங்கேறி காவியமாகும் பொழுது இது தான் அதற்கு பிறகு உன் ஞாபகங்கள் பாதிப்பால் நான் பைத்தியமாவேன் நான் உன்னை மறந்திருப்பேன் நான் பிறந்த சிசு நான் தான் உன்னுடைய அனு நீ அறிமுகம் செய்து சலித்து போவாய் என்ன செய்வதென்று தெரியமால் விழி பிதுக்கி யோசித்துபின் என் புருவங்கள் கன்னங்கள் நாசி தாடை கழுத்து வளைவுகளில் முத்தங்கள் ஏவிய பின் நான் பைத்தியம் தெளியலாம் நீ வியர்த்துபெரு மூச்சு விடலாம.

Friday, April 25, 2014

மான்சியின் பிங்க்


வெள்ளை நிறத்தின் தேவதையான
மான்சி பிங்க் நிறத்தின்
பைத்தியக்காரியாக இருக்கிறாள்
பிங்க் டாப்
பிங்க் பாட்டம்
பிங்க் வளையல்கள்
பிங்க் காதணிகள்
பிங்க் ஸ்டிக்கர் பொட்டுகள்
பிங்க் நெகபாலீஸ்
பிங்க் வார் செருப்புகளென
தினம் ஒன்றை அணிந்தவளாக
ஃபேஸ்ட்வீல் மூடில்
திழைக்க செய்கிறாள்
செர்ரி பழத்தின்
சுவை ஏற்படுத்துகின்ற
அவள் உடலில்
பழுத்திருக்கும் மயக்கு முடுச்சுகள்
பிங்க் நிறத்தில்
இந்த நாளில் புதிதான
கட்ஸூக்களை
அணிந்து வந்து கழட்டி
ஏறிந்தவளின்
பளிங்கு கால்கள்
பிங்க் நிறத்தில்
வியர்த்திருக்கிறது.
.
பிங்க் வார்த்தைகளால் தொடங்கும் மான்சிக்கு
ஒரு அதிர்ச்சியை வைத்திருக்கிறேன்
மான்சிக்கு எதனால் பிங்க் பிடிக்கும் கேட்டபடி
அவளை நெட்டி தள்ளி
முத்தங்கள் ஏய்திய பின்
இந்த ஆழ்ந்த காதலில்
அவளுக்கும் ஈடுபாடாம் என்பேன்