Monday, October 1, 2012

உன்னை மீள் வாசிப்பை

விருப்பமும் யாசிப்பும்
கூடி தளர்ந்த பின்
பிற அலுவல்களால்
உன்னோடு நிகழ்வுகள் பெரிதாக
கவனிப்பை பெறுவதில்லை
உன் சிணுங்கல்கள்
எரிச்சல் மூட்டுகிறது
உன் நடத்தைகளில்
குறை ஒதுக்கிறேன்
உன்னை கொண்டாடிய
பொழுதுகள் மீள்வதை
ஒருபோதும் நான்
விரும்புவதாயில்லை
உற்சாகத்த காதலை
மிச்சம் வைக்க கூடாதென்று
மனவற்புறுத்தல்
களைக்கிறது
இரவல் வாங்கிய
புத்தகமென நீ
ஒன்று திரும்ப வாசிக்க வேண்டும்
அல்லது தூக்கி
தர வேண்டும்

No comments:

Post a Comment