Thursday, August 23, 2012

நிலவு பாலம்

நிலவுக்கு பாலத்தை
கட்டி முடிந்தாதை
அயர்ச்சி கொள்கிறேன்
போன வசந்த காலத்தில்
ஆரம்பித்த பணி
இந்த கோடையில்தான்
முடிந்தது
பல ராட்சத இயந்திரங்கள்
பல மில்லியன் பாறைகளும்
பல மில்லியன்
உடைக்க முடியாத
இரும்பு கம்பிகளும்
தேவைபட்டது
.
அதன் சுவர்கள்
அதிசயிக்கிறது
பாதுகாப்பு உறுதியாய்
இருக்கிறது
திருகுகள் பல முறை
சரிபார்க்கபட்டது
ஆனால் எதோ தவறு
நடந்திருக்கிறது
இது சரியல்ல
.
நிலா தன் நிறத்தை
மங்கியது
அது ஜோலிக்க வில்லை
வெளிச்சம் தரவில்லை
அப்போது தான்
கவனித்தேன்
பாலம் சூரியனையே
மறைத்து விட்டது

நான் பறவை

நான் என் பொருட்களை
வெளியே எறிவதில்லை
.
என் அறையில்
குப்பைகளை சேர்ப்பதில்லை
.
எனக்கு துடைப்பம்
தேவைபடுவதில்லை
.
எந்த பொருளையும்
நான் உடைக்க தீர்மானிப்பதில்லை
.
என் உணவுக்கென
நான் செலவு செய்வதில்லை
.
என் நிர்வானத்தை
பிறர் பார்க்கும் போது
நான் நாணபடுவதில்லை
.
என் மேசையை
நான் சுத்தபடுத்துவதேயில்லை
.
நான் தொலைக்காட்சியை
பார்ப்பதேயில்லை
.
நான் கதவுகளை
பூட்டுவதேயில்லை
.
என் உணவுதட்டுகளை
நான் கழுவதேயில்லை
.
எனக்கு வார்த்தைகள்
தெரியாது
.
இந்த வாழ்க்கையும்
தெரியாது
.
நான் பறவை
பறப்பது எளிது

ஜென் கவிதை

சாளரம் வழி தெரியும்
.
தூரத்து தென்னை மரங்கள்
.
மிகை தூரிகை
ஒவியங்கள்
.
# ஜென் கவிதைகள்

Sunday, August 19, 2012

உடைகள்

உடல் விடுத்து
உடைகள்
எப்படி
கொடிகளில்
காயுதோ

நீ காதல் மொழி

உன் கவனிப்பின்றி
என் வழிபாதை
அடர் வனமாகிறது
நீ வரும் என் கனவுகளின்
கோப்பு நீட்சியாகிறது
ஆனால் என்னை கவனிக்க கூடாதென்று
திட்டமிட்டு
ஜாக்கிரதையாய்
இருப்பதாக
உன் கண்
சமிக்ஞை செய்கிறது
நீ என்னிடம் தவறவிட்ட
உன் கைக்குட்டையை
நான் முத்தமிடுகிறேன்
நீ எங்கேயிருந்தோ என் ஸ்பரிசத்தை
அனுப்பவிக்கிறாய்
நான் வார்த்தைகளென
நீ உதறிவிடுகிறாய்
நீயோ எனக்கு
மொழியாகிறாய்

Thursday, August 16, 2012

வானம்

தரைக்கு மேல்
ஒரு கடல்
தலைகீழாக
கவிழ்த்திருக்கிறது
ஏறக்குறை
அதன் பசி
குறைந்து விட்டது

நீர்

நிலத்தின் இரத்த கசிவு
சிறிதளவே
எம்பி மேடு ஏற பார்த்து
தத்தளக்கும்
பள்ளத்திலே ஊரும்
.
பாறையின் இரத்த கசிவோ
அளவற்றது
வெண்மேகங்களின்
நிறத்தில் பொங்கி
வழிகிறது
பாறைகளை தேய்த்து
பிய்கிறது
ஆச்சரியமோ
அதிசயமோ யென
அதை நெருங்க முடியாது
மேலும் அவை
சுத்திரவாதி
ஒரு சொட்டு
அதற்கு
ஆட தெரியாதே
கூட்டம் சேர்த்து கொண்டு
ஆட்டத்தை காட்டும்

Tuesday, August 14, 2012

113

கணக்கற்ற முறைகளில்
என்னை மறுக்கிறாய்
.
உடைந்த
விளையாட்டு பொருளுக்காக
தரையில்
விழுந்து புரண்டு
அழுகும்
குழந்தை ஆகிறேன்

உன்னோடு சம்பாஷனைகள்

பெரும்பாலும் சம்பாஷனைகள்
உன்னிடம்
நலம் விசாரிப்பதில்
தொடங்குகிறது
பிறகு
உன் பணி அலுவலகம்
நிலவரம்
கேட்டு ஆறுதலாகிறேன்
பிறகு
ஒரு முனை
நகற்றுவதாய்
உன் ரகசியம்
அறியும் ஆவலாகி
என் உரையாடல்களை
நெட்டி தள்ளுகிறாய்
மௌனம் கவுத்துகிறாய்
பெரும்பாலும்
அதை உடைப்பதே
சிரமம்
பிறகு
உணவு உட்கொண்டாய்
யென
மிதமான உபசரிப்புகளால்
நீயோ
ஆசுவாசமாகிறாய்
நானோ
துப்பாக்கி குண்டுகள்
வெடித்து தூரத்திய
பிணை கைதியென
மனபிறழ்வுடன்
ஒடுகின்றேன்
பாதை தெரியமால்

ஜென் கவிதைகள் - 6

வியாக்கனங்கள் அற்று
.
நுனிபுல் மேயும் மாடு
.
பரந்த புல்வெளியில்
.
படர்கின்றேன்

110

வாழ்தல் அல்ல
ஏறக்குறைய
சகித்தல்

கற்கள்

எதையாவதை உடை
அல்லது
உடைந்து போ

நட்பு திருநாள்

பால்ய காலங்களில்
சைக்கிளில்
சுற்றி ஒய்ந்த
மாலை மங்கும்
நகர தெருக்கள்
பொலிவு இழந்திருக்கின்றன
இந்நாளில்
நீ இன்மையால்
.
என் சீட்டுக்கட்டுகள ை
கலைக்கிறாய்
என்னுடன்
ரிமோட் புடுங்கி
தொலைக்காட்சி
அலைவரிசை
மாற்றி லயிக்கிறாய்
நான் அடித்த
மட்டை பந்தைக்காக
பின் தொடர்ந்து
ஒடுகிறாய்
மொத்தத்தில்
என் பொழுதுகளை
புடுங்கும் நீ
பொழுதுக்காக அல்ல

நீர்

தரை பார்த்து விழு
பள்ளங்களில் வழி

106

கலை என்கிறேன்
.
இங்கே
உலை பொங்கவே
வழியில்லை
எதற்கு கலை
என்கிறார்கள்
மக்கள்

105

நிழல் விற்கிறேன்
இப்பெண்மையிடம்
அவள் நிழல்
கண்டு
தூரத்தி விடுகிறாள்

104

சன்னல் பின்னல்
ஆகிறதே
தேகம்
காலை மாலையும் யென
சிலுப்படும் பொழுதுகள்

103

கால்களுக்கிடையே
கோணங்கள்
வைத்து நகரும்
சூழல்

102

ஒலி ஒளி பேழையில்
சிக்கி கொண்டு
நகரும்
கடிகார முட்கள்

தவறுகள்

என் பயகோல்
கொண்டு
ஊதுகையில்
பருத்த நெருப்பு போல்
என் சிறிய
தவறுகள்

கவிஞர் கொள்கை

நம் எழுதுவதே கவிதை
புத்தகம் வெளியிட்டாச்சு
வேறோரு கவிஞர் கவிதைகளை
படிக்கமால் இருப்பதே
நல்லது
புத்தி கூர்மை
கவிதைகள் புரியமால்
கேட்கும்
வாசகர் கேள்விகளுக்கு
பதில் சொல்லதே
கவிஞர் கொள்கை

டியூப் லைட்

பக் பக் யென
பற்றி கொள்
மெதுவாக
ஒருவர்
மன எண்ணங்களை
எள்ளலின்
அடையாளமாக
உங்களுக்கு
இதே பெயர்
டியூப் லைட்
குறியீடுகள்

குப்பை

கசங்கிய பேப்பர் தூசுக்கள்
துடைப்பத்தால்
துடைத்து
குப்பைகளென ஏறிய
வீடே பெரும் சுத்தம்
அவைகளுக்கும்
ஒரு வாய்ப்பு
கட்டல் சந்திலோ
கதவு சந்திலோ
ஒளித்து கொள்ளலாம்
அப்படி ஒளிபவை
குப்பை பெயர் விடுத்து
தம் பெயரையே
பெறுகின்றன

குளிர் , மழை , வெப்பம்

வெப்பம்
குளிர்
மழை
மூன்றும்
ஒரு சேர
உணர்கிறேன்
நீ
இருந்தால்

எறும்பு நான்

மோப்ப சக்தியை
இழந்த எறும்புகள்
இறந்து விடுமாம்
.
உன் நினைவுகளை
இழந்தால்
நானும் அப்படியே

கனவுகள்

நிகழ்வுகள்
குளிர் கண்ணாடி
அணியும் கனவுகள்
அதிருப்தியாகவும்
திருப்தியாகவும்
விடிய வைக்கும்
காலையை
முகம் தெரியாதவளுக்கு
வளையல் தேடி
அலையும்
இருண்ட தெருக்களில்
நோய் எதுவும் மின்றி
அன்பானவர்களின்
கை பிணைப்பில்
கிடக்கும்
கமழும் அன்பிற்காக
விஷம் அருந்தி
நடு சாலையில்
கிடத்தும்
நான் மட்டும்
கனவுகளை
பின் தொடர்த்திருத்தால்
அன்பிற்கு ஏங்கி
பலவீனமாகிருப்பேன்

கோடு

ஒரு கோடு வரைகிறேன்
நதி ஒதுங்குகிறது

ஹெவன் சொற்கள்

ஹெவன் சொற்கள்
உன்னிடம்
ஹெல் சொற்களும்
உன்னிடம்
எதை என்பதை
தேர்ந்தெடுக்கும்
சொற்கள் மட்டும்
என்னிடம்
நீ ஒன்றே
நான் ஒன்றே
இந்த உலகம்
வேறு வேறு

தியாகம்

ஷூக்கால்களின்
வெற்றிக்கு பின்
செருப்புகள்
அணியாத
யாரோ ஒருவரின்
தியாகம்
ஒளித்துள்ளது

அமர்தல்

அமர பழகியது
ஆசன வாய் அமைப்பா
நாற்காலி அமைப்பா

Monday, August 13, 2012

துடைப்பம்

என்றோ இறந்த பறவையின்
தோகைகளால் ஆன
விசிறி ஒன்றை
தெரிந்தவர் வீட்டில்
கண்டேன்
.
ஒரு மூலையில்
கிடந்தது
.
இரத்த வாடை
அடிக்கும் மென்று
நானும் அதை
நெருங்கவில்லை
.
சிறிது நேரத்தில்
அந்த நபர்
அதை எடுத்து
தரை முழுக்க ஒட்டி
விசிறி விட்ட பின்
" பெரும் சுத்தம் "
என்றார்
ஒன்றுமே
விளங்க வில்லை.

மாலை நேர மரங்கள்

கிளைகளின் நாக்கால்
குளிர்மை தேடும்
வெயில் பட்ட
மாலை நேர மரங்கள்
.
அதன் நிழல்
அகால மரணம்
விழ்ந்திய மனிதன் யென
விழுந்து கிடக்கும்

Wednesday, August 8, 2012

அமிர்தம்

அமிர்தம்
கடைக்கிறேன்
காதல்

மரணம்

கும்மிருட்டு
ஒரு பெண் சடலம்
அவ்வளவுதான்
மரணம்

டைட்டானிக் காதல்

ஜேக் ரோஸ்
தங்கள் உயிருப்பை
காப்பாற்ற
கடல் மிதப்பில்
ஒரே இடம் தான்
இருந்தது
காதல்
காப்பாற்றபட்டது
.
இந்த சோகம் தோய்ந்த
நகரத்தில்
பல ஜேக்கள்
பல ரோஸ்க்கள்
இருக்கிறார்கள்
தங்கள்
காதல் பயணிக்க
மிதப்பில்
இரு இடமும்
இருக்கிறது
இருவருமே
ஏறுவதில்லை
மாறாக
காதலையே
சாகடிக்கிறார்கள்