Friday, March 22, 2013

மோட்டர் வாகனங்கள் , பிளெக்ஸ் போர்டுகள் , இராட்சத கட்டிடங்கள் .

சிலருக்கு இருப்பதைப்போல
எனக்கென ஒரு மோட்டர் வாகனம்
இருக்கிறது
நானும் அதுவும் மாறிமாறி
துரோகம் இழைப்பதற்காக
எதிர்படுவோர்களிடம் பேசிவைத்திருக்கலாம்
.
உடல் நசுங்கி கை கால் அகன்று
தலை நசுங்கி எத்தனை இழப்புக்கள்
குழந்தைகளை கூட
விட்டுவைப்பதில்லை
நாளும் பார்க்கிறோம்
வென்கியூப் நகரத்தில் தொடங்கி
பல நகரங்களில்
வாகனத்தை தலைகீழாகவும்
எப்படியும் ஓட்டுவதற்கு
ஆள் இருக்கிறது
இழப்புக்களை கண்கொள்ளமால்
அப்படியொரு முயற்சி
மரணத்தையே வென்றதாகப்படும்
அப்படி ஆக முனைப்பு
கூடுகிறது
.
சக நண்பன் விபத்தில் மாண்ட
செய்தி கேள்வியுற்று
எரியூட்டும் விழாவுக்கு
சென்றிருந்தேன்
இனி அவனை காண முடியாது
என்ற எண்ணம் மேலூங்கி
தொண்டை அடைந்து
அழுகை வர
அடக்கி கொண்டேன்
பின் நாட்களில்
பயணங்களில் நெடுங்சாலைகளில்
அவன் பிரேதம் தேடி
அழைந்திருக்கேன்
பைத்தியகாரனாக
.
நோய் வந்தால் கூட
தெரிந்த இடத்தில் மரணம்
விபத்துக்கள் தெரியாத இடங்களில்
துன்பம் இழைக்கிறது
வாகனங்களை கண்டால்
அயர்ச்சி அளிக்கிறது
அதன் ஒவ்வொரு
எந்திர பாகத்திலும்
மரணத்தின் திசுக்கள் ஒட்டியிருக்கிறது
என் மொத்த சகாப்த்தையும் அடக்கி
அதன் முன்னர்
வணங்கி விழுகிறேன்
.
என் பரிணாம பய உணர்வுகள்
சில நாட்களுக்கு முன்பு
பிளேக்ஸ் போர்டுகள் மீதும்
அதற்கும் சில நாட்களுக்கு முன்பு
இராட்சத கட்டிடங்கள் மீதும் இருந்தது.

Saturday, March 16, 2013

பேரழகி ( காதல் புனைவு )

அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். கூச்சம் யென்று சொல்லி கொண்டே நிறைய பேச அவளுக்கு தெரிந்து இருக்கிறது. நல்ல வாழக்கையை வழி கொணர பார்க்கும் என்னை , லௌகீகத்தில் விழ செய்வாள் போல. சிநேகமாய் வார்த்தைகளை இறைந்து விடும் அவளது கையை பிணைந்து நீ தான் வேண்டும் யென சொல்ல வேண்டியிருக்கிறது. என்னை உதறிவிடுவாளோ என்ற பயத்தில் விட்டுவிட்டேன்.என் எழுத்துக்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள சிரமபடுகிறாள். மேலும் , நான் கவிஞன் யென்பதையே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் , என்னை பற்றியே விபரங்கள் கேட்கிறாள். அவள் கை அசைவில் புகுந்து , நெற்றி வகிட்டால் அடைபடுகிறது என் உயிர்.

Thursday, March 14, 2013

அவள் வதனத்தில் வளர்ந்த என் பதின்ம மரம்

என் பதின்மங்களில்
வெயிலோடு ஒட்டிக்கொண்டிருந்தேன்
எனக்கு உகந்த காலமென்று
தொலைப்பதே மீள் தேடலுக்கு தான் யென
கடந்து வந்திருக்கையில்
எல்லாமுமாக ஒரு பெண்
வந்திருந்திருந்தாள்
அவள் வதன நிழலில்
இளம் பச்சை இலைகளை கொண்ட
தாவரத்தை வளர்த்தேன்
பச்சை கனிகள்
இலைகளுள் மறைந்தது
உதிரும் முதிர் இலைகளை
அள்ளி வீசியெறிந்தேன்
அங்கே கூடுயிடும்
பறவைகளை கண்டு
மகிழ்வுற்றேன்
பின் நாளில்
அவளும் அதே தாவரத்தை
வளர்த்தாகவும்
சில நாட்களில் தளர்ந்துவிட்டதாக
ஒரு இரவில்
கேள்வுயுற்று அதிர்ந்தேன்.

Saturday, March 2, 2013

She is an english lecturer ( காதல் புனைவு )

அவளோடு நல்ல பழக்கம் எற்பட்ட
சில நாளிலே ,அவளை
பெயர் சொல்லி அழைக்கும்
உரிமை எடுத்ததில்
அவளுக்கு நெருடலாக இருந்திருக்கலாம்.
எப்படியானலும் ஐந்து வயது இளையவன்
அப்படி அழைப்பதை
எந்த பெண்ணும்
ஏற்றுகொள்ளமாட்டார்களே ?
எனக்கு சில காரணம் இருந்தது.
அவள் வார்த்தைகள்
என் கவிதைகளுக்கு கொஞ்சம் தேவைப்பட்டது.
வெளிப்படையாக
அவளிடம் சொல்ல முடியாத பிரச்சினையும் கூட . . .
.
" புத்தகங்கள் நிறைந்த அலமாரியோடு கூடிய
என் பிரத்யேக அறையில்
ஒரு நாளில் அவளோடு பேசி கழிவதாகவும் ,
அந்த நேரத்தில் கூட
அவள் வீட்டில் அவளுக்கு தேர்ந்த
வரன் தேடி யோசித்துக்கொண்டிருக்கலாம் "
என்று புனைவாக ஒரு
கவிதையில் எழுதியிருந்தேன் .
அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம்.
அது எந்த மாதிரி உணர்வு யென்று
எனக்கு தெரியாது.
அன்றிலிருந்து எங்கள் உறவு
வலுப்பட்டிருக்கலாம்.
.
அவளுக்கு இரண்டு அக்கா.
ஒருவள் உள்ளூர்
கம்பெனி அலுவலகத்திலும் ,
மற்றொருவள் ஐடி கம்பெனியிலும்
வேலைபார்ப்பதற்காக சொன்னாள் .
அதை விட , அவள் அக்காக்களிடம்
என்னை பற்றி சொல்வதற்கு
விஷயம் இருக்கிறது
என்பதை அவள் ஒப்புக்கொண்டதிலிருந்து
அவள் பெயரை சில கணங்களுக்கு மீள் நினைவுறுத்தி
நனைந்துக்கொண்டிருந்தேன்.
.
நான் ஸ்டூடென்ட் என்பதிலிருந்து ,
நான் சந்தித்த சில லெக்சரரிடம் ,
" நீங்க அழகாக இருங்கீங்க " யென சொல்லமுடியாது
ஆனா இவளிடம் சொல்ல முடியும் என்பதிலிருந்து,
கொஞ்சம் அன்பும் கொஞ்சம் கண்டிப்புடன்
சிலரை வழிகாட்டும் அவள் வாழ்க்கையில்
நான் இருப்பதாய் நினைக்கையில் ,
நெருப்புக்குள் குளிர்காய்வதாய் உணர்வுகள் .
.
காதலிக்கிறேனா ? யென தெரியாது .
காதலுக்கு திட்டமிடல் சரியல்ல.
ஒருவேளை அவள் இங்கிலீஷ் லெக்சரர் ஆக
இல்லமாலிருந்தால்
பெரிதாக அவள் மேல் ஆர்வம் ஏற்பட்டிருக்காது.
A love from default profession . . .