Saturday, January 4, 2014

கேர்ள்ஸை பார்த்தல்

எதிர்ப்படும் எந்த வொரு அழகான பெண் முகத்திலும் அப்படி என்னதான் இருக்கிறது யென பார்த்து பழகியிருக்கிறேன். பெண் முகத்திற்கு முகம் தன்மை மாறுபடுவதாக , ஏதோ உணர்வு இருப்பதாக , அதன் வழி அவர்களின் வாழ்க்கை பெரியதாய் தெரிவதாக , முகத்தின் கண்கள் , மூக்கு , உதடுகள் , கன்னங்கள் நேர்த்தியை அறிவதற்காகவும் . இது முடிவில்லாத செயல். முகத்திற்கு மேல் முகமாய் பார்த்து லயிக்க தொடர்ந்து கொண்டு இருப்பவை. நான் மாற்றிக்கொள்ள முடியாத பழக்கம்.
.
இதை உணர்ந்து எழுத வைத்த உப காரணியான இந்த பெண் என்னோடு படிக்கும் சக மாணவி; ஏற்கெனவே நட்பு , காதல் யென பேசி ஒரு சிறிய காலத்திற்குள் பிரிந்தவள் இந்த பெண்; அழகானவள்; ஆனந்தி என்ற பெயரால் அறியப்படுபவள். எங்கள் வகுப்பறை வெளி வாராண்டாவில் நடந்து வர ஆனந்தி எதிர்ப்பட்டாள். யாரோ ஒரு பெண்ணை வழி மறித்து பேசிக்கொண்டிருந்தாள். ஆனந்தி அவளிடம் கேட்டாள் " முன்னை விட கலர் கூடுட்ட " . நான் கேட்டததும் ஆனந்தி முன்னிலையிலே அந்த புதிய பெண்ணை பார்த்து விட ஆர்வமாய் நடந்து கொண்டேன். நான் பார்க்க முடிந்ததில் அவளோ அதற்கு எதிர்ப்பக்கமாக முகத்தை வைத்திருந்தாள். என் போக்கை பார்த்த ஆனந்தி சொன்னாள் "இதெல்லாம் நல்லாயில்லை ஆமா." நான் சிரிக்கமட்டும் செய்தேன். இந்த சம்பவத்தின் மூலம் நான் பெண்கள் மேல் காட்டும் அதீத ஆர்வத்தை ஆனந்தி தவறாக நினைக்கலாம். எனக்கு ஒரு கெட்ட பெயர் வைத்திருப்பாள். என்ன செய்ய முடியும் ?. பெண்களிடம் விரிவாக சொன்னால் மட்டும் புரியபோகிறதா ? இப்படி முகங்களை தொடர்ந்து பார்த்து பழகுவதில் கிடைக்கும் வினோத உணர்வை அவர்களுக்கு எப்படி தெரியும்.