Tuesday, July 31, 2012

உலகம் நீ

நானோ உன்னை
என்
தனியார்மயமாக்க
விரும்பினேன்
.
என்னை
நீயோ
உன்
உலகமயமாக்கல்
ஆக்கி விட்டாய்

Thursday, July 19, 2012

அன்பு ஏக்கம்

வயிற்று வலி மிகுந்து ஒரு கர்ப்பிணி நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு தொலைப்பேசி அழைப்பதாக கனவு கண்டேன் . ஏன் எதிர் காலத்தில் என் மனைவியாக கூட இருக்கலாம் அன்பின் பரிவர்த்தனைக்கு ஏங்கி வாழ சொல்கிறது

சகோதரி

திடமானதில் முட்டி உடையும் நீர்துளி யென மூத்த சகோதரி உன்னிடம் சம்பாஷணைகள் பேசி உடைகிறது மனம் . சகோதரியாகும் நீ உன்னிடம் பேச என்ன இருக்கிறது ஒரே நேரத்தில் தாய்மையும் சிநேகமும் உன்னிடம் கிடைப்பதாய் லயிக்கும் மனம்

பழி வாங்கல்

நீ என்னிடம் சொல்ல குதூகல விஷயங்கள் இருக்கலாம் எனக்கோ உன்னிடம் காட்ட விம்மி புடைத்த சில காயங்கள் இருக்கலாம் யார் முதலில் சொல்லும் முனைப்புடன் சம்பாஷனைகளிடம் நீயே சொல் யென ஆசுவாசம் கொள்கிறேன் உன் மகிழ்ச்சி செய்திக்காக நான் என் குதூகலத்தையும் காட்ட வேண்டிய நிர்பந்தம் உன் வாய் சிரங்கள் கால்கள் கட்டி மண்தாரையில் உன் உடலை இழுத்து வந்து இருளில் போட்டு உன் சுவாச குழலை அறுக்க வேண்டும்

சூரியன்

ஆச்சரியமென்ன அமெஷிங் இந்த சூரிய கோலி குண்டு மறு வீடு வந்தவன் பொல தினமும் கோபித்து கொள்கிறது

Friday, July 13, 2012

சின்னாபின்னம்

சின்னாபின்னமாகிறது
தெருக்கள்
ஊர்கள்
நகரங்கள்
நாடுகள்
ஏன் இந்த உலகமே
.
மக்கள் கையில்
கிடைத்த
உலகம்
உலகத்தின் கையில்
கிடைத்த
மக்களும்
சின்னபின்னமாகிறது

புணரல்

ஹாட் என்று
வெயிலோடு
தனலாடுகின்றது
போர்வைக்குள்
இறுக்கம் வேண்டி
குளிராக்கிறது
லேசாக
பின் தூறும்
மழை எது

Thursday, July 12, 2012

தீவிரவாதம்

பொருள் உராய்வே
இல்லை
தீ விபத்து
என்கிறது
ஊடகம்
சாமான்ய மனிதர்களிடம்
சாமான்யமாக கலந்து
சாமான்யமான
கோபம்
கொப்பளித்தது
செய்தி அறிந்த
உலகம்
.
கழுகு நாடுகளின்
வெள்ளை மாளிகையில்
ஒரு கருப்பன்
தாடிக்கார முஸ்லீம்
தீவிரவாதத்தை
வீழ்த்தி விட்டதால்
தீவிரவாதம்
ஒளித்தது என்கிறான்
.
ஒ ! அப்படியா !
யார் தீவிரவாதத்தை
வளர்த்தது
யார் கையில் உள்ளது
தீவிரவாதம்

Tuesday, July 10, 2012

காதல் கவிதைகள் பத்து

என்
கையளவு
மனம்
லயிக்கும்
இடம்
உன்
விரலளவு
நெற்றிச்
சந்தனமும்
குங்குமம்
.
என் காதல்
கூட்டி
உனக்காக
உன்னதமென
கட்டிடம்
அமைக்க மாட்டேன்
உன் மேல்
நான்
கட்டிய காதல்
அதை விட
பெரியது
.
குவளையில் நீரை
நிறைப்பதைப் போல்
உன்னை
நிரப்பி வைத்துருக்கின்றேன்
உனக்கு
தாகமே எடுப்பதில்லை
எனக்கு
தாகமே தீர்வதேயில்லை
.
நான் செடி
நீ மண்
ஆகவே
நான்
வற்றி
வாடினாலும்
உனக்கு
கவலை
இல்லை.
.
நீ
என்னிடம்
செய்யும்
ஒவ்வோரு
குறும்பு தனத்தின்
பின்னணியிலும்
ஏதும்
தெரியததாது
போல்
எங்கோ
பார்க்கும்
உன்
மை விழிகள்
கண்டு
நீதான் என்று
நான்
அறிந்துக் கொண்டாலும்
"என்ன ஆச்சு ?"
என்று அறியாதது
போல்
உன் நடிப்பு
எனக்கு
வரவே வராது
.
நீ
குடிப்பெயரும்போ து
வாங்கமால் விட்டுச்சென்ற
இசை தட்டை
நான்
இப்பொழுதெல்லாம்
கேட்பதில்லை
ஏனென்றால்
மெல்ல இசையோட்டத்தால்
உன் நினைவுகளால்
நான் அழுதே விடுகிறேன்
.
என் அனுமதியின்றி
என் பொருட்களை
எடுக்கும்
நண்பர்களை
கோபத்தில்
திட்டி விடுகின்றேன்
நீ எனக்குள்
புகுந்து எதையோ
உருவி செல்வதை
பார்த்தும் என்னால்
கண்டிக்க
முடியவில்லை
.
மழை துளிகள்
உன் மேல்
விழுக யாசிக்க
கடின மழைக்கு
நீயே
காரணம்
.
உன் முகம்
பார்க்கமால்
கிடக்கும்
என்னிடம்
காதல் பற்றி
கேட்கிறார்கள்
முகத்திற்காக ஏங்குவது
என்று சொல்லட்டுமா.
.
கடற்கரை மணலில்
அமர்ந்து பேசி
விடை பெறும் போது
பின்புற சேலை மணலை
மெழுகு கைகளால்
உதறி ஏறிவாள்
அத்தோடு
என் பேச்சையையும் என
பின்னாளில் தான்
அறிந்து கொண்டேன்

முரண்

எல்லாம் தெரிந்தவன்
அடக்கமாக இருப்பான்
என்கிறார்கள்
.
வாய் உள்ள
பிள்ளை பிழைக்கும்
என்கிறார்கள்
.
எதை நம்புவது ?

Monday, July 9, 2012

காதல்

தேகத்தை பொறுத்தோ
வதனத்தை பொறுத்தோ
குணநலன் பொறுத்தோ
பிறிட்டு வழியும்
காதல்
எந்தவொன்றிலும்
ஏற்படும்
அனுசரனை
இதில் ஏற்படுவதில்லை

Sunday, July 8, 2012

ஸ்பைடர் மேன்

பிய்கிறது எண்ணற்ற கால்களில்
கேசத்தில் ஊடே பாய்ந்து
கண் பார்வையை
மங்குலக்கிறது
மூக்கு கூர்மையில்
வழிந்து
உடல் தள்ளி
விழுகுகிறது
உதடுகளில் பயணித்து
உமிழ்நீரை விழுங்குகிறது
தாடையில் வழிந்து பின்
விழுந்து மாயமாகிறது
மார்பின் ஊடே
பாய்ந்து பிறப்பு உறுப்பு வரை
செல்கிறது
கரம் கால்களை
பாதங்களையும்
விட்டுவைப்பதில் லை
கண்ணாடி
உடையணியும்
பின் பிய்ந்து
எறிந்து விட்டு
சாகசத்திற்கு
கிளம்புகிறாய்

பெயர்களில் ஒளிந்தவர்கள்

என் மீதும்
சில மதிப்பீடுகள்
அப்பாவி
அடப்பாவி
கொடும்பாவி
.
உங்கள் மீதும்
சில மதிப்பீடுகள்
நல்லவன்
கொடியவன்
வன்மையானவன்
கொலைகாரன்
.
இந்த உலக மக்கள்
மீதும்
சில மதிப்பீடுகள்
மிகவும்
மோசமாக மக்கள்
.
உங்களையும்
என்னையும் போல
இந்த உலகம்
சாதுர்யமானது
ஒவ்வொன்றும்
தங்களுக்கென்று
பெயர் வைத்து கொண்டு
அதற்குள்
பதுங்கி கொள்கிறது

நினைவுகள்

நாள்கள் யென
மணலை சலிக்கும் நீ
கற்கள் யென
நினைவுகளில்
தங்கி
கொள்கிறாய்

அங்கலாய்ப்பு

ஹோட்டல்களில்
புரோட்டாவுக்கு
அதிக சால்னா
மிச்சபடுத்திய
அங்கலாய்பை
மன கண்ணை
சொறிக்கிறது
பின் கால்களில்
ஒட்டி பிசுபிசுபிக்கிற து
.
பின் உன் வழிதடத்தில்
கூட்டம் இல்லமால்
நிறத்தமால் சென்ற
பேருந்தில்
தொங்கி ஏறிக்கொள்ளும்
அந்த அங்கலாய்பு

விருப்பம்

யாசித்தல் போது
அதிக விருப்பமும்
.
ரசித்தல் போது
குறைந்த விருப்பமும்
.
எப்படியோ
ஏற்பட்டு விடுகிறது

நிலா

காலை நேரங்களிலும் கூட
எந்தவோரு வானிலையையும்
காட்டமால்
அம்மா
வட்டக்கல்லில்
நிலவை சூடுவதோடு இன்றி
அதை இரண்டாக
மடித்து விடுகிறாள்
.
எப்போழுவதாவது
மஞ்சள் கலவையோடு நிலவை
பார்த்ததுண்டு
.
பிறகு வெள்ளை கலவையோடு
நிலா எப்போழுதாவது
.
சில நேரங்களில்
கருக்கி விடுகிறாள்
அப்போழுது
அமாவாசையென
நினைத்து
கொள்கிறேன்.

முதல் காதல்

என் முதல் காதல்
பற்றி கேட்கிறார்கள்
.
என் பால்ய பருவத்தில்
ஒரு நடிகையின்
முக அசப்பில்
சைக்கிளில்
என் வீட்டை
அடிக்கடி
கடந்து போன
ஒரு மூத்த சகோதரியை
முதல் முறையாய்
காதலித்தேன்
.
இப்பவும் கூட
தேவையான நேரங்களில்
அவளை காதலிக்கிறேன்

சாமான்ய மனிதன்

சாதனைகளோடு
கட்டி புரளும்
மனிதர்களிடம்
விசித்திரம்
சுழல்வதாய்
அவநவம்பிக்கை
கொள்கிறேன்
.
அவர்களும்
சாமான்ய மனிதன்
என்பதை
மறந்து விடுகிறேன்

நிராகரித்து விடாதே

உன்
எண்ணங்களுக்கு
ஈடாக
ஒடிக் கொண்டிருக்கிறேன்
.
ம்ம்ம்
நிராகரித்து விடாதே

ஒடுதல்

நடத்தல்
ஒடுதல்
வித்தியாசம்
காண முயல்கிறேன்
.
உடல் சார்ந்த
ஒடுதலை
ஒடுதல் என்று
சொல்லிட முடியும்
.
முழுமை பெறவில்லையே
என உணர்கிறேன்
.
நீங்கள் உங்கள்
கற்பனைகளையும்
இழுத்து கொண்டு
ஒடவில்லையே