Monday, November 26, 2012

தனிமை படல்களில் தெளிந்த இரத்த துளிகள்

மின்விசிறியின் பேரிச்சரலுடன்
தனிமை சுவர்களில்
அடைப்பட்டு
விபரிதங்களால்
மிதித்து எறியப்படுகின்றதன்
கோர முகம்
.
யோனி கேசம் நீவுதல்
புடைத்தல்
மீள் நெருங்குதல்
ரணமா என்றோ
சுகித்த சாயலா
.
உமிழ் வழி தொண்டையில்
ஊறும் திடமான
எச்சில்
தேகம் பரப்பி வைக்கப்படுகின்றது
.
தடயங்கள் அழித்தல்
பின் வரைதல்
மேல் ஆடை நீக்கி
முலை திருகிய
வழிதடங்களில்
நெட்டுயர்ந்த தண்டில்
மலர் வெடித்து
இரத்த துளிகள் தெறிந்தது
தனிமை படல்களில்
.
இயல்பு திரும்பிய
பொழுது
யூகமானது

Sunday, November 18, 2012

யாசிப்பு

கால் அறுந்த
சிலந்தி ஒன்று
வலை பின்னிய
கிளை யடைய
கிளையாய் இருந்து
தவித்தேன்
அதை உற்சாகப்படுத்த
என் கத்தல்
அதற்கு கேட்பதாயில்லை
காற்றோடு சல்லாபலமிட்டு
கிளை நகர்த்தி
பயனில்லை
என் பதின்மத்தில்
நான் அதே
சிலந்தி யென
நான் தொடர்பு கொண்டவர்கள்
கிளை யென
இருந்திருக்க கூடும்
நானும் கிளை யடைய
தவித்தேன்
கிளை விருப்பமும்
என்னை வந்தடையவில்லை
புலப்படும் காயங்களின்
வலி உணரப்படமால்
நிறைவேற ஏக்கங்கள்
ரணமாகிறது
புரட்டி போட்ட
காலம் கழிய
சிறகு இழந்த
வண்ணத்துப்பூச்சி
கிளை அடைய
நான் தன்மை
இழந்திருந்தேன்


அங்கே ஒரு கடல்

சிறுகற்கள் உடல் அழுத்த
மனபிராண்டலுக்கு பின்
உணவு விழுங்கிய
பாறை துண்டு நெளிந்ததால்
விழிக்க
அந்தரத்தில் ஒரு
நீள்கூரை பரந்து கிடந்தது
அங்கு இருந்தது
ஒரு கடல்
கூதலினி
மேல் படர்தல் பற்றி
பேச கேட்ட பின்
அனிச்சையாக
நார்த்தனமாடும்
அவள் கரு விழியைப்
பார்த்தேன்
அங்கு இருந்தது
ஒரு கடல்
தளர்ந்த பாதை
முற்களின் கூடம்
அதற்கு மேல்
சுகித்த தடயங்கள்
அங்கும் இருந்தது
ஒரு கடல்

Tuesday, November 13, 2012

என்னுடைய "என் இரவுகளை காலி செய்பவள் " நாவலில் இருந்து ஒரு பக்கம்

ஏறக்குறைய அவளுக்கும் எனக்கும்
என்ன நேர்ந்தது என்பதையே
இருவரும் மறந்து விட்டோம்.
மிதமான விசாரிப்புகளால் என்னை குளிர்வூட்டினாள்.
அது எனக்கு போதுமானதாக இல்லை.
அவளை என் வழியில் செலுத்த வேண்டியிருந்தேன்.
ஆனால் அவளோ என்னை
அவள் வழியில் கட்டியிருந்தாள்.
.
வார இதழுக்காக எழுதிய குறிப்பு ஒன்றை
அவளிடம் காண்பித்தேன்.
" காதல் புரியாத வயதிலே
எனக்கொரு காதல் தோல்வி இருந்திருக்கிறது , தற்போது
நண்பர்களின் காதல் பேச்சுகள் என்னையும்
காதல் தேடியலைய
தூண்டுகின்றது .
இருந்தாலும் வேண்டாம்
ஏனெனில் இறுதியில் அவர்களுக்கு உடைந்த
கிளிஞ்சல்கள் கூட கிடைக்கலாம் " யென்று
எழுதியிருந்தேன்.
எதுவும் சொல்லவில்லை
திருப்பி கொடுத்துவிட்டாள்.
.
என் தேகம் மிதக்கும்
அவள் கண்களை பார்த்தேன்.
எனக்கு சில குறிப்புகள்
கிடைத்தது.
"என்னை காதலிக்கவேயில்லை
என்கிறாயோ . சில நாள்களுக்கு முன்பு என்னை
காதலிப்பதாக சொன்னது சூட்சுமமா ".
தண்டவாளங்கள் பழகும் வரை இரயில் பெட்டிகள்
தடதடக்கிறது

வார்த்தைகளின் வாசிப்பு

அவளுக்கு கவிதைகள்
மேல் மிகை விருப்பமாம்
.
சில நேரங்களில்
எழுதவும் செய்வலாம்

.
இருவரும் பரஸ்பரம்
தங்கள் கவிதைகள்
மாற்றி வாசித்து கொண்டோம்
.
மீள் வாசிப்பின் சுவராசியம்
அவள் கவிதைகளில் இல்லை
அவள் வார்த்தைகளில்
உண்டு.

இரவின் நதி


நசநசத்த பூஞ்சைகள்
மனித உடல்களில் படரும்
பகல் பொழுதுகளில்
சகிக்க முடியாதவர்கள்
தொடர்ந்து
உதறியெறிகிறார்கள்
மீள் படர்தல்
தொடர்கிறது
சகிக்காத நாற்றத்துடன்
மாலையில்
வீடு அடைகிறார்கள்
குளிர்மையோடு
இரவின் நதியில்
மிதக்கும் அவர்களின்
மேல் படர்ந்த பூஞ்சைகளை
மீன்கள் மெல்ல திங்கும்

ஊடலும் தேடலும்

உறவின் நீட்சி
பழைமைகள் வடிகட்டபடுகின்றது
தெரிந்த ஒன்றை
மறக்கின்றோம்
புதிதாக ஒன்றை

வாசிக்கின்றோம்
எதையோ தேடியலைகின்றோம்
தொடர்ந்து பயணிக்கின்றோம்
மௌனமாக சிலவற்றை
விளக்கி விடுகின்றோம்
சலனமாக சிலவற்றை
எதிர்பார்க்கின்றோம்
வீழ்ந்தது கனவாகின்றது
ஆனால் இந்த
ஊடலும் தேடலும்
பொழுதுகளை
மாற்றி கொள்கிறது

உன் வர்த்தைகளால் உடைந்த இரவு

உன் நினைவு அறுந்த
அந்த பகல்
அதே மீந்த இரவில்
உன் வார்த்தைகளை
கண்டு தோய்கிறேன்

நீயோ எனக்கான
கேள்விகளை
யூகித்து வரிசையாய்
என் இரவில் அடுக்கிறாய்
.
சாளரம் வழி
மேற்கில் மேகங்கள்
கூரை வேய்ந்தது
இருளை அறையிலும்
மெத்தை போர்வைக்குள்ளும்
அடக்கியது
நீயோ வெள்ளை
வெளீரென்று
பகலை என் மீது
திணிக்கிறாய்
.
அயர்ந்த என் பேச்சு
உனக்கு விரசமாய் கேட்க
உன் குதூகலத்தின்
வீரியம் குறைந்து
மௌனம் கமழ்த்தி
உறங்க போகும்
அந்த இரவு
என் மேல் நைந்த
உறக்கத்தை
உடைக்கிறது

அவநம்பிக்கையின் காலம்


அவநம்பிக்கை இதோ எனக்கான
காலநிலை யென குறித்து வைத்துகொண்டு
என்னை வந்தடைந்தன
.
மேதாவிலாசங்கள் ஒரு மாயையே எனினும்  
மேதாவிலாசங்கள் உணர்த்த தருணங்கள் கூட உண்டு 
நான் மேதாவிலாசங்கள் அற்றவன் யென 
மேடையில் முழங்குபவனை பார்த்து கேட்க வேண்டும் 
எதற்காக மூச்சு வாங்குகிறாய் யென்று
.
மழைக்கால பிரிவுக்கு பின்பு 
என்னை தொடர்பு கொண்டவர்களிடம் இருந்து
 எந்த குறிப்புகளும் வந்து சேர வில்லை
.
தன் காதலன் பொருள் தேடி
தூர நகர சென்ற பின்
என் குறிப்புக்கள்
அவனை நினைவுபடுத்துவதாக
 என்னுடன் உரையாட வேண்டாம் 
என்கிறாள் ஒருத்தி
.
தேர்ந்த துணையாளனை அடைந்த பின்
என்னை வந்தடைந்த அவளுக்கு
நான் அனுப்பிய குறிப்புகளில் காதல் வழிகிறதாம்
ஊரார் கேட்டால் உன் மாணத்துக்கும் இழிவாகும்
என்கிறாள் இன்னொருத்தி
.
பெண் உடலுக்காக தகிக்கதே
என்கிறாள் இன்னொருத்தி
.
மன சஞ்சலங்கள் அடைந்த பின்
உடலிலும் நோய் பீடிக்கிறது
.
ஏறக்குறைய என் கொடுக்களில் 
விஷத்தின் வீரியம் அதிகமாகி விட்டது 
இழப்புகளின் காலநிலை 
அடுத்து தயாரக இருக்கலாம்
 என்னை வந்தடைய

தேநீர் கோப்பையில் இரவு

தேநீர் பாத்திரத்தில்
கொதித்து சொட்டலிற்கு கிடையே
உரையாடல்களை நிறுத்தி பின்
வாசிக்கிறாய்
ஒருமித்த கவனிப்பு

இல்லை உன்னிடம்
.
வாசனைகளால் நிரம்பி வழிந்து
கோப்பையின் தேநீரை
பருகிய பின்
மீதம் இருக்கிறதே இரவு

தேககூடலினி

என் கவிதைகளில்
ஊடல் குறிப்புகளை மட்டும்
பிய்த்து பார்க்கிறாள்
என் குறிப்புகள்
என்னிடம் தொடர்பு கொண்டவர்களின்

குறிப்புகளாய் இருக்க
உண்மையென இதையும்
உறுதியிட்டு
இரகசியம் பிடுங்க
பார்க்கிறாள்
பெண் வாசமற்ற
என் தடங்களை பற்றி
அவள் அறியமால்
.
ஒரு மடிந்த மாலையில்
ஊடல் குறிப்புகள் கேட்டு அறிந்தபின்
மீள் சந்தேகங்களுக்கு
யாரையும் சார்ந்திருக்காதே
என்கிறாள்
எனக்கேற்ற தேககூடலினி

விழிப்பு

விழிப்பு பளு இம்மி குறைதல்
பளு பரண் அதிகரித்தல்
.
படுக்கை புரட்ட
அருகே யுள்ள
பொருள் குளறுபடி

பொருள் தேடுதல்
.
கனவில் நம்பிக்கையை
உரித்தவனிடம் இருந்து
நன் குறிப்புகள் வந்தடைகின்றன
விழிக்கையில்
.
நேற்றைய இழப்புகளுக்காக
விசும்ப குளிர்
தொண்டையை அடைகிறது
.
டொயன் பறவைகள் நகர
அங்கே
கா பறவைகள்
சங்கமமிடுகின்றன

Monday, November 12, 2012

உரையாடலினி

தேவையின் பெயரில்
ஒரு உரையாடலினி
.
உன் பெயரின்
பின் பகுதியில்

ஆண் தன்மை
ஒட்டியிருக்கிறது
என்கிறேன்
அப்படியிருப்பதற்கான
சாத்தியங்கள்
பேசுகின்றாய்

ரகசிய முட்டைகள்

உன் ரகசியம்
குறுகிய வழி
நான் அடைய
நீ வழி மறைக்கிறாய்
விளைவுகளை

முட்டைகளென அடைகாக்கிறாய்
உன் ரகசியம் அறிந்த
வேறோருவரால்
உன் முட்டைகள்
கண்டறிந்து
உடைபடலாம்
கற்பனைகள் தீயது
நிகழ்வுகளை சந்திக்காதவரை

Sunday, November 4, 2012

என்னுடைய "என் இரவுகளை காலி செய்பவள் " நாவலில் இருந்து ஒரு பக்கம்

மெல்லிசான குரலில் வணங்கினாள்.
நான் ஒழுங்கற்ற காகிதங்களை
அடுக்கி வைப்பதில்
மும்மராக இருந்தேன்.
தலையாட்டினேன்
கொஞ்சம் தாமதமாக.
" என்னோடு பேசலாமா
வேண்டாமா என யூகிக்கிறாயா ...?" என்றாள். அவள்
வார்த்தைகளால் சில்லிட வைத்தாள்.
தசைகள் சுலபமாகி விடுத்து
சிறு பறவையென
குதூகலமாய் பறப்பதாய்
உணர்ந்தேன்.
உடனே அவள் சொல்வதை மறுந்தேன்
சந்தேகமில்லை தெளிவான மறுப்பு.
அதற்கு மேல் அவளுக்கு
பேசுவதற்கு வார்த்தைகள் பிடிபடவில்லை.
நானே தொடர்ந்தேன்.
" உன் பயணங்கள் பிறருக்கு பயன்பட
ஏதேனும் கொள்கை இருக்கிறாதா ? " என்றேன்.
"ம்ம்ம் .... இல்லை " என்றாள் மலைப்பாக.
"ஆனால் எழுதுவதற்கு ஆசை இருக்கு "
"உன்னை போல் எழுதுவதற்கு
சில காலம் ஆகும் " என்றாள்.
"சிலருக்கு என் எழுத்துக்கள்
குப்பையாக தோணலாம்" என்றேன்.
"அப்படியிருக்காது " மறுத்தாள்.
" உன் எழுத்துகளில் நீ
விசித்திரம் கூட்டுகின்றாய் " என்றாள்.
"ம்ம்ம்... " என்றேன்.
நான் சில உத்திகளை
கற்று தந்தேன்.
"உடனே செய் " என்றேன்.
"அலுப்பாக இருக்கிறது. நாளைக்கு பொருந்தி
அமர்ந்து எழுதுகிறேன் " என்றாள் கொஞ்சலாக.
சில நேரங்களுக்கு நானும்
அவளும் மௌனங்களால்
கட்டுண்டோம்.
"ஏதேனும் வேலை இருக்கிறதா .? " என்றேன்.
"சொல்லு "
"எதுவும் இல்லை "
"ம்ம்ம் ... "
"இன்னும் நான் உன்னை பற்றி முழுதாக அறியவில்லை .? " என்றேன்.
அவள் பேசவில்லை.
அதே மௌனம்.
அவள் பழகிவிட்டாள்.
அவள் கனத்த மௌனம்
வலித்தது.

இயற்கையை வணங்குவோம்

மலைகளில் நடத்தல்
கால் நோகுதல்
பாதசாரிகளின்றி
இரத்தம் துருத்தி
உப்பிக்கொள்தல்
.
நொடிகளை பகுர்ந்துவிட்டு
மலை உயரத்திலிருந்து
விழும் பிம்பங்கள்
தேகம் இரத்தவாடையோடு
சிதறி போதல்
.
உயர மரங்கள்
காற்றோடு ஒ வென
ஒப்பாரியிடம்
ராட்சத இலைகள்
தரை பார்த்து விழுதல்
மரணம் பிளக்கும்
.
தேகம் உறையும்
கடுகடுப்பு
பாயும் நதி
சேறு சகதியில்
கழற்றும் உறுப்புகளை
மரணம் அப்பிய படி
.
கடலில் நீந்தி
உயிர் குடித்தல்
.
நெருப்பு ஊதும்
பொறி ஒய்ந்த பின்
தேகக் கூடுகள்
பல்லை காட்டும்
.
தொடர்ந்து
மரணம் நிகழ்கிறது
இயற்கையை
வணங்குவோம்