Friday, June 29, 2012

விளக்கில் ஒழியும் பெண்கள்

ஏமாற்றங்களே
வாழ்க்கையாக போக
தன் தலை கவழ்த்தி
அழு குரல் வெடிக்க
அமர்த்திருக்கும்
பெண் யென
ஏறக்குறைய
பூஜ்ஜியத்தின் உருவமாக
சில விளக்குகள்
.
வெள்ளை தேக பெண்
ஆடைகளற்று படுக்கையில்
படுத்திருப்பது போல்
சில விளக்குகள்
.
பணம் குவியம்
மது விடுதிகளில்
அறை குறை
ஆடைகளுடன்
ஆபாச நடனம்
கழிக்கும்
பெண்கள் யென
தெரியும்
கடவுள் முன் எறியும்
சுடர் ஆடும்
எண்ணெய்
விளக்குகள்

கவிஞர் பிம்பம்

பத்திரிகைகளில்
யதார்த்த மாயம்
பேசும் கவிஞர்களே
.
திரையில்
கதா நாயகிகளுக்கு
வர்ணனை தூதி
பாடும் பிம்பத்தை
தோற்றுவிக்கிறார ்கள்
.
இரண்டில் எது
மெய் பிம்பம் யென
குழம்புகிறார்கள ்
.
ஆக மொத்தம்
கவிஞர் என்பவன்
பெண் பாவாடையை
பிடித்து கொண்டு
அலைய வேண்டும் யென
நினைகிறார்களா .?

அடுத்த படைப்பு

இணைய அரட்டைகளில்
யாரோ பெண்ணிடம்
சிநேகம் கொள்ள வேண்டும்
அவளை
கதா நாயகியாக
மாற்ற வேண்டும்

புனைப்பெயர்

புனைப்பெயர்
யூகிக்கிறேன்
பெயர் கொஞ்சமே
பெண் தன்மை
சார்த்திருக்க
வேண்டும்
இயற்கையின்
முக்கிய பொருளாக
இருக்க வேண்டும்
.
ஆனால்
எழுத்தில் மட்டும்
ஆண் தன்மை
இருக்க வேண்டும்
பெண்களை
வர்ணித்து பாட
முக்கியம்
பாலியல் பற்றி
பேச வேண்டும்
பின்னே அது தானே
தேவை

கொள்கை

கடலளவு எழுதவேண்டும்
பேனாவை நதியில்
தூக்கி போட வேண்டும்

உங்களுக்காக

நான் சிலதை விட்டு வைக்கிறேன்
உங்களுக்காகவும் கூட

ஜென் கவிதைகள் - 5

நதியில் குளித்து
.
மணலில் நடக்கிறேன்
.
காமுக்காக பின் நடக்கும்
ஒருவன்
.
நின்றதும் என் பாதங்களில்
ஒளிகிறான்

இங்க் எரெசர்

உன் காதல் எனக்கு பிடிக்கவில்லை
இங்க் எரெசர் தேடுகின்றேன்

மரணம்

நாள்கள்
ஒத்திகைகளில்
கழிகறது
மரணம்
வரை

பாட்டி

எந்த ஒன்றும்
இருந்த சுவடே
தெரியமால்
அழிக்கிறது
அழகை
தவிர
.
இப்போதும்
பாட்டியின் முகத்தின்
பார்க்கும் போது
இளம் வயதில்
அழகியாக
இருந்திருப்பாளோ
யென்று
யூகிக்க முடிகிறது

பாஸ்பரஸ்

தொட்டால்
சுடேற்றும்
உன்
பாஸ்பரஸ்
தேகம்
உதடு
வதனம்

மாடர்ன் கவிதை எழுதுவது எப்படி - 3

என்னை
நம்பினோரை
கை விடமாட்டேன்
நான் நயவஞ்சகன்
அல்ல
.
நீங்கள் இன்னோரு
மாடர்ன் கவிதையை
இயற்ற தயராக
இருப்பது பற்றி
எனக்கு தெரியும்
.
இருந்தாலும்
என் கற்பனையை
யதார்த்ததோடு
போரட விட்டு
சோதனை செய்த
பிறகே அதை
உங்களுக்கு
கற்று தருவேன்
.
அது வரை
மன்னித்து
பொறுத்தாழ்க

டைம்

எனக்கு டைம்
பார்க்க தெரியாது
.
உடனே என் படிப்பினை
பற்றி யோசிக்கிறீர்கள்
.
காலம் கடிகாரத்திற்குள ்
சூழல்வதாக
எனக்கு எந்த நம்பிக்கை
இல்லை
.
அதனால் நான்
டைம் பார்க்க
கற்று கொள்ள வில்லை
.
உங்களுக்காக
வேண்டாம்
எங்களுக்காக
கற்றுக் கொண்டிருலக்காமே
.
உங்களுக்காக
எதற்குகாக
கற்று கொள்ள
வேண்டும்
நான் சுயநலம்
பார்ப்பவான்

பிரதி பலிப்பு

எல்லைகளையும்
உணர்ந்தேன்
அதன்
பிரதிபலிப்பில்
விழுந்து
கிடந்த போது

அகாலம்

அகாலம்
கழியும்
மரணத்தை
நம்பி

பொழுதுகள்

இந்த காலை
கண்ணில் புகை
அடிக்கிறது
உன் பார்வை
காட்சியை
மங்குலாக்கிறது
.
இந்த பகல் பொழுது
காற்றில் பறக்கும்
பாலிதீன் பைகளின்
விரசம் ஒலி யென
தனிமையை
கட்டி போடுகிறது
.
அந்திமம்
வீணாகிறது
உன் தேநீர்
கோப்பைகளில்
கொஞ்சம்
நிரப்பி கொள்
.
இந்த இரவு
நீ உறங்க போகும்
படுக்கை அறை
கதவிற்கு பின்
ஒழியும் கனவு
உன்னை
கொலை செய்ய
கத்தியில்
விஷத்தை
தேய்க்கிறது

மாடர்ன் கவிதை எழுதுவது எப்படி - 2

ஒரு வக்கிர காட்சி
எப்படி மாடர்ன்
கவிதையாக மாற்றி
உங்கள் தன்மானத்தை
காப்பற்றியதை
போன பகுதியில்
பார்த்தோம்
படிக்க இங்கே;
http:// writernachathira .blogspot.com/ 2012/06/ 1_78.html
.
அதை வாசகர்கள்
மாடர்ன் கவிதையென
புது ரசனை யோடு
படித்திருப்பார் கள்
.
இன்று அடுத்த
பகுதிக்கு செல்லாலம்
.
மாடர்ன் கவிதைக்கு
எப்போதும் தேவை
கமர்ஷியல் தலைப்பு
அது இயல்பு
வாழ்க்கையின்
முக்கிய பொருளாக
இருக்க வேண்டும்
.
நான் இங்கே
அழகு குறிப்பு யென
தலைப்பிட்டு
மூன்று கவிதைகளை
எழுதியுள்ளேன்.
.
எனக்கு போதை தந்த
மூன்று காட்சிகளை
கலச்சார காவலர்கள்
கண்ணில் படாதவாறு
கவிதை யாக்கிவிட்டேன்
( பெருமிதம் )
.
முதல் காட்சி
பெண் தன் உதட்டை
தேய்ப்பதையும்
.
இரண்டாவது காட்சி
பெண் குளிக்க
போகும் முன்
வறண்ட கேசத்தை
கொண்டை போட்டு
நிற்பது
.
மூன்றாவது காட்சி
சாளரத்தில்
வெளிச்சத்தில்
பெண் தன்
நிர்வாண உடலை
காட்டும் போதை
.
இப்படி
உங்கள் மனம்
உறுத்தும் காட்சிகளை
இப்படி மாடர்ன் கவிதையாக
வடிக்கலாம்
முக்கியம்
கமர்ஷியல் தலைப்பு
அப்போதுதான்
வாசகர்கள்
ஏமாறுவார்கள்
.
பக்கத்து அறையில்
ஒரு பெண்
உள்ளாடை
மாற்ற போகும்
காட்சியின் போதையை
மாடர்ன் கவிதையாக
எழுத
உங்களுக்கு
இலவசமாக
குறிப்பு தருகிறேன்
.
முயற்சி செய்து
பாருங்கள்
.
அழகு குறிப்பு - 1 ;
http:// writernachathira .blogspot.com/ 2012/06/1.html
.
அழகு குறிப்பு - 2 ;
http:// writernachathira .blogspot.com/ 2012/06/2.html
.
அழகு குறிப்பு - 3 ;
http:// writernachathira .blogspot.com/ 2012/06/3.html

Thursday, June 28, 2012

பரிதாபமாக ஒரு கவிஞன்

என்னை போல்
உங்களை போல்
ஒரு கவிஞன்
பரிதாபமாக
காதல் தோல்வியால்
தன் காதலியின்
அழகு சாதனை பொருளை
ஞாபகம் வைத்து
ஒரு கவிதை இயற்ற
.
அந்த பக்கம்
சென்ற இளைஞன்
ஒருவர்
பெண்களே ஒரு பூ
எதுக்கு செயற்கை
அழகு
என்ற கருத்தை
வெளிபடுத்தியிரு க்கிறார்
எவ்வளவு
ஒழுக்க பாதகமான
செயல்
கண்டிக்க வேண்டியது
.
அதற்காக
ஒரு சரக்கு
வாங்கி கொடுத்து
அவர் காதல் சோகத்தை
கேட்டிருக்கலாம்
என்று நான்
சொல்லவில்லை

Saturday, June 23, 2012

பாடி லோசன்

உன் மேனியில்
தடவுதல்
கற்றுக் கொண்டிருக்கேன்
.
நீயோ
என் தடயம்
அழிக்க
உன் உடலில்
பாடி லோஷன்
தடவி
கொண்டிருக்கிறாய்

மாடர்ன் கவிதை எழுதுவது எப்படி - 1 ;

(இந்த கவிதை
புரியாதவர்கள்
இதை படித்து விட்டு
பின் தொடரவும்
http://writernachathira.blogspot.com/2012/06/blog-post_6134.html )
சேலை ஒதுங்கி
முலை தெரிய
தூங்கும்
பெண்ணை பார்த்த
உங்கள் இருப்பு
கொள்ளாது
உடனடியாக அதை
கவிதை எழுதி விட
தோன்றும்
சரி எழுதலாம்
.
அப்படியே
உவமை படுத்தினால்
வக்கிர கவிஞர்
என்று பெயர் தான்
கிடைக்கும்
.
பேசமால் அதை
மாடர்ன் கவிதையாக
மாற்றி விடலாம்
.
கமர்ஷியல் தலைப்பு
கவிதைக்கு
கொடுக்கவும்
உதாரணமாக
சமையல் குறிப்பு
.
சமையல் குறிப்பு
என்று வைத்தால்
சமையல் குறிப்பையும்
எழுத வேண்டும்
அதே சமயம்
அந்த காட்சியை
அங்கே திணிக்க
வேண்டும்
.
சரி சமையல் குறிப்பு
என்றால்
சமையல் செய்வது
எப்படி யென சொல்ல
வேண்டியது இல்லை
யூகிந்தால்
ஒரு யோசனை
கிடைத்து விடும்
யாருவது ஒருவரை
சமையல்
செய்ய வைக்க
தூண்ட வேண்டும்
முதலில்
மனைவியிலிருந்து
தொடங்கலாம்
.
உங்களுக்கு
பசி எடுத்தால்
உங்கள் மனைவியை
எப்படி எழுப்பீவிர்கள்
திடுமென்று
எழுப்பினால்
உங்கள் நிலைமை
பரிதாபமாக
ஆகி விடும் தானே
நாசூக்காக
எழுப்பிவீர்கள்
நீங்கள் எப்படி
எழுப்பிவீர்கள்
என்று குறிப்பிட்டால்
நல்லது
அடுத்த
அவளுக்கு
பசி நேரத்தை
ஞாபக படுத்தும்
உவமை வரிகளை
இங்கே குறிப்பிடுங்கள்
போதும்
.
அழகான
வக்கிரமான
கமர்ஷியலான
மாடர்ன் கவிதை
கிடைத்து விடும்

ஜென் கவிதை - 4;

கால்களை
.
தத்தி தத்தி வரும்
.
ஒரு உயிரினம்
.
என் அருகில்
.
இருக்கும் நீர் குடிக்க
.
நான் என் இருப்பை
.
காலி செய்கிறேன்

ஜென் கவிதை - 3;

கருவேலா மரத்தில்
.
கூடு கட்டிய
.
வெள்ளை பறவை ஒன்று
.
நான் நெருங்குவதை
கண்டு
.
கிளைக்கு கிளை
பாய்ந்து
.
வானம் பறக்கிறது

நாள்கள்

இன்னும் என்னிடம்
சில ரொட்டி துண்டுகளும்
சில கருத்த தேநீருள்ள
கோப்பையும்
மீதம் இருக்கின்றன
யூகிந்து சாப்பிட்டு
கழிக்க

பேதை

பெண் என்றால்
அபிலாசைகளை
கட்டுப்படுத்த
வேண்டுமா என்ற
எதிர் மன கேள்விகளுடன்
தன் சகோதரனின்
நண்பனின்
சுபாவத்தால்
ஈர்க்கபட்டவாள்
ஒருத்தி
.
அவனை
அலைப்பேசி சொற்களில்
விழ செய்கிறாள்
.
அவர்களுடைய
மனம் பற்றிய
வார்த்தை
பரிவர்த்தனைகள்
உடல் பற்றிய
வார்த்தை
பரிவர்த்தனைகளாக
நாளடைவில்
மாற
.
சில நேரங்களில்
ஆண் என்பவன்
பெண்ணை தீண்டும்
விஷ ஸர்ப்பம் மென
ஆவது இயல்பு தானே
.
இவனை மட்டுமா
குறை சொல்ல முடியுமா
.
அவள்
உடல் தீண்டும்
ஆசையை
அவன்
முறையிட
சில வாக்குவதங்கள்
நிகழ்ந்து விட
.
அவன் சுபாவங்களை விட
என் உடல் தர
அது ஈடாற்றது என்று
அவள்
தெளிவு கொள்ள
.
நீர் கவ்விய
நெருப்பு யென
துணிந்தாள்
உடலிழக்க
இந்த பேதை

காகம்

நான் அமர்ந்திருக்கும்
திறந்த வெளிக்கு
பக்கவாட்டில்
ஒரு காக்கை
பறக்கிறது
.
இப்போழுதே
என் வரிகளில்
பிடித்து
போட்டு விடுகிறேன்

ஜென் கவிதை - 2 ;

படலில் படரும்
.
சிறு கொடிகள்
.
வியப்பிக்கும்
.
அந்தரத்தில் தொங்கும்
.
மின் கம்பிகளை பார்த்து

ஜென் கவிதை - 1 ;

இன்றே முடி
.
இளம் கொக்கு
.
மீன் யென
.
கற்களை கொத்த

Tuesday, June 19, 2012

பேய்

நனைந்தால்
உடல் கொட்டி
ஒதுங்கும்
நல்ல மழை
சாரல் ஒழுகும்
சாளரம் கண்ணாடியில்
பேயை கண்டேன்

காற்று

விதை பழம்
உதிர்த்து
விடுவதில்லை
.
மரங்களை
நிலை கொள்ள
விடுவதில்லை
காற்று

முதுகெலும்பு இருந்தவன்

என் அன்றாட
செயல்களுக்காக
அவன் மெனக்கெடுபவன்
.
முதுகெலும்பு யென
இருந்தவனை
தனிமை ஏறியப்படும்
தெருக்களில்
தேடிகொண்டிருக்கேன்
.
இப்பொழுதுக்கள்
தீயில் காயும்
இரும்புயென
கொதிக்கிறது

கதகதப்பு

அமுதத்தின்
ஊற்றுயென
இந்த பாறையை
பிளக்கிறேன்
அயர்ச்சி கொள்ள
செய்யும்
கதகதப்பு

மீனாக

செதில்களை
அசைத்த படி
வெளிச்சமோ
இருட்டோ
போகிற திசையில்
போய் கொண்டிருக்கும்
மீன் ஆக
நான்

அழகு குறிப்பு -3

சாளர
வெளிச்சத்தில்
உடைகள் இல்லமாலும்
இருளில்
உடைகள்
அணிந்த படியும்
நில்லேன்

அழகு குறிப்பு -2

குளிக்க போகும் முன்
உன் வறண்ட
கேசத்தை
கொண்டை கட்டி
கொஞ்சம் நில்லேன்

நெருப்பு

மலை முகட்டில்
எறியும் நெருப்பு
எனக்கானது
நான் இங்குயிருந்தே
குளிர் காய்ந்து கொள்கிறேன்

இரயில் பெட்டி

காடே யென
கதறிய படி
மனித தலைகள்
நிழலாட
ஒரு புழு
திட்டமிட்ட
பாதைகளில்
பயணிக்கிறது

பறவையும் , கற்கலும்

புத்திக்குள் சிக்கிய
பறவை விமானம்
ஆனது
கற்களோ கடவுள்
ஆனது

ஒதுங்கி நின்றவள்

அவள் பேச்சுகளால்
லயிக்க பட்டவன்
அவள் கனத்த
மௌனம் கண்டு
அதிர்வுற
அவள் உடல்
மாறுதலை
நிகழ்த்தி விட
கதகதப்பென
ஒதுங்கி நிற்கிறாள்
நெருங்க முடியாத
தூரத்தில்...

இருள் விரட்டும் வெளிச்சம்

குறுகிய வீட்டுக்கு கூட
அகன்ற வாசல்
கிடக்கிறது
வெள்ளை நிறத்தில்
ஜோலிக்கும் விளக்கு
இருள் விடுவதேயில்லை
.
மூன்றாம் நபரோடு
பின் ஒளிந்து
வரும் இருளை
விரட்டியடிக்கும்
வெளிச்சம்

போண்டா சூரியன்

எண்ணெய் சட்டியென
கடலில் விழுகும்
போண்டாவென சூரியன்
நிறமிழந்து
சட்டியிலும்
எண்ணெயிலும்
வண்ணத்தை
கலக்கிறது

குறிப்புகளின் இளவரசி

இக் குறிப்புகளின்
இளவரசியை
நேற்று பார்த்தேன்
அலைபேசியில்
யாரிடமோ
அழுதுக் கொண்டே
பேசிக் கொண்டிருந்தாள்
.
இன்று காலை
எதிர் வீட்டு
சாளரம் உடைபடும்
சத்தம் கேட்டு
எழுந்தேன்
மனம் அரட்டி
கொண்டாலும்
என்னவென்று
பார்த்து விட வேண்டிய
குதூகலம் என்னை
அறிக்க

Sunday, June 17, 2012

புகைக்கூட்டில் கடவுள்

சாளரம் அடைத்து
கதவு அடைத்து
இரவில் தூங்கும் மக்கள்
அரங்கேற்றம் ஆரம்பிக்க
இருளிலும் கண்
தெரியும் கடவுள்
ஒரே வழியென
வீட்டு புகைக்கூடு
வழியாக வெளியே
வர
எதிர் வீட்டு
புகைக்கூட்டில்
அமர்ந்திருப்பது
நீல நிறத்தில்
ஜோலிக்கும் கடவுள்
இன்னும் இருபது
நிமிடங்கள் இங்கே தான்
என்கிறார்

விவசாயி

மாட்டு வண்டியின்
சக்கர அச்சில்
தன் உலகத்தை
மாட்டி
சுழல்கிறான்
காடு அடைதல்
சந்தை அடைதல்
வீடு அடைதல்
அதிருப்தி கழியும்
அவன் உலகம்
தன் புதல்வனை
அதிலிருந்து
மீட்டு எடுக்க
முயல்கிறான்

குழாய் நீர்

கலவியில்
புணர் ஒசையோ
பறவை
நின்ற படி
சிறகை விரித்து
அயர்ச்சியின்
ஒசையோ
யாரோ ஒருவளின்
வெடி சிரிப்போ யென
ஒடி போய் பார்த்தேன்
தெரு குழாயில்
நீர் வந்து கொண்டிருந்தது

செ_ஸ்

நான் ஒரு தட்டானை
பரிசளித்தேன்
அவளோ
மிருதுவான
இரண்டு ஆமைகளையும்
ராட்சத கொடுக்கு
உடைய
நண்டு ஒன்றை
பரிசளித்தாள்

Saturday, June 16, 2012

அழகு குறிப்பு - 1 ;

ஆரஞ்சு
சுளைகளென
உன் உதட்டை
தேய்த்தபடி
கொஞ்சம்
நில்லேன்

சமையல் குறிப்பு

அலுவலக பணி
முடித்து விட்டு
சாளரத்தின் வெளிச்சம்
அவள் மேல்
விழுந்த படி
தன் முன் மு*
காட்டி தூங்கும்
மனைவியை
நாசூக்காக
எழுப்ப வேண்டும்
அப்படி எழுப்ப
உங்களுக்கு
கற்று தரவா
வேண்டும்
அவள்
கண் முழிக்கும் போது
வயிற்றை தேய்த்த படி
நகரும் கடிகார
முட்களை
பார்த்தாலே போதும்

ஒரு ஒலிப்பெருக்கிகாரன்

ஒரு
ஒலிப்பெருக்கிக்காரனை
கொல்ல
தேடிக்கொண்டிருக்கிறேன்
தத்தம் தம்
அனுபவங்களையும்
லாஜிக் களையும்
பேசும்
அவன்
தன் மனைவியோடு
முலை நீவிய
ரகசியத்தை
சூட்சுமங்களையும்
ஊரறிய சொல்லி விட்டான்
அதனாலே
அவன் மனைவி
அவனை கொல்ல
என்னை அனுப்பினாள்

Friday, June 15, 2012

உப்புச் சொற்கள்

நீ என்னோடு
ஒட்டியும்
ஒட்டமாலும்
பேசும் உன்
உப்புச் சொற்கள்

தெய்வச் சிலை

அங்கே
யார் சிற்பத்திற்கு
சேலை அணிவித்து
அலங்காரம் செய்தது
நசுக்கப்படும்
சிற்பியின் திறன்
கற்பனை

மதில் சுவர் சொற்றொடர்

இரவு உணவு
தயாரித்தலுக்கு முன்பு
இரு அண்டை வீட்டு
பெண்களும்
மதில் சுவர்
சொற்றொடரில்
விழுந்து கிடத்தார்கள்
கணவான்மார்களின்
கூச்சல் கேட்டு
சொற்றொடர்
உடைய அடுத்த
பகல் பொழுதில்
அதை ஒட்ட வைக்க
முனைகிறார்கள்.

ghost

நீ கடைக்கு
நடக்கும் போது
ghost on the street light
நீ கடையில்
இருக்கும் போது
ghost on the store
tube light

இறுக்கம் Open

உன் உள்ளாடை
ஊக்குகள் - இ
இறுக்கம்
என் பட்டான்கள்
-O Open

இந்த இரவு

மருந்து ஊசி
ஏற்றிய கடுகடுப்புடன்
இருக்கும் இந்த இரவு
.
நோய் முற்றிய
அதிருப்தி மயக்கத்தில்
உறக்கம்

நாட்கள் குறித்து

பறவையின் சிறகடிப்பை போல்
கழியும் நாட்கள்
சாளரத்தையே உற்று பார்த்தபடி
நாட்கள் குறித்து எண்ணியது
நேற்றாக இருக்கலாம்
அல்லது
அதற்கு முந்தைய நாளாக இருக்கலாம்.
நாட்கள் பற்றிய குழப்பம் எதற்கு
பறவையின் சிறகடிப்பைபோல்
கழியும் நாட்கள்

பென்சிலை சீவாதே

ஆரம்ப பள்ளி சேர்ந்த காலகட்டம்
மரப்பலகைகள் போடததால்
தரையை தேய்க்கும் காலம்
.
பென்சில் சீவி பூ சேர்ப்பதில்
விசித்திரப்பட
தினமும் ஒரு பென்சில் தேவைப்பட்டது
.
பொறுக்காத வீட்டில் அடிக்கு பயந்து திட்டோடு
தப்பியிருக்கிறேன்
.
சில நாட்கள் தயங்கி
திரும்பவும் பழக்கப்பட்டது
பூ சேர்ப்பதில்
.
அதற்கு இப்பொழுது என்ன
.
உறவினர்கள் தெரிந்தவர்கள் வீட்டிற்கோ போக நேரிட்டால் தன் குழந்தைகள் பென்சில் சீவுவதை பொருளாதார செலவோடு ஒப்பிட்டு பேசும்போது மனதால் குறுகி போகிறேன்.

நினைவுகளால் ...கடந்து போன சம்பவத்தை , உறவுகள் நினைத்து நிகழ்காலத்தில் ஏங்க வைப்பது நினைவுகள். ஒரு மனிதனை வருத்தபட வைக்க , ஏங்க வைக்க , அழ வைக்க , தோற்கடிக்க , சந்தோச பட வைக்க , நல்லவனாக்க , கெட்டவனாக்க என அத்தனையும் நினைவுகளால் செய்ய வைக்க முடியும். கடந்த காலத்தின் வியப்பை கூட்டுவதும் நினைவுகள். ஒரு சமயம் என்னுடைய பாட்டி யிடம் ஒரு புகைப்படத்தை காட்டி இவர் யார் ? என்று கேட்டேன், "என்னுடைய தம்பி , சிறு வயதில் அணையில் நீச்சல் தெரியாம குளிக்க போய் இறந்துட்டான் " என்று சொல்லி அன்று இரவு முழுக்க அழுது கொண்டே இருந்தார். கடையில் புகையிலை வாங்கும் தாத்தாக்களை பார்த்தால் எனக்கு முகம் காட்டாத என் தாத்தாவின் நினைவு என்னை சாகடிக்கிறது. ஒரு நினைவு எத்தனை நாட்களை தாண்டி வந்திருக்கிறது. சுந்தர ராமசாமி அவர்களின் ஜே.ஜே. சில குறிப்புக்கள் படித்திருக்கிறார்களா ? ஜே.ஜே வின் ஒரு நாள்குறிப்பில் ஒரு தச்சனின் உளியின் சப்தத்தை கேட்டு , தச்சரான அவரது தந்தை நினைவு வருவதாக அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.
பேச்சு , செயல் , வாசனை என உலகத்தில் எந்தவொரு செயலாலும் பொருளும் ஒருவரின் நினைவை தூண்டிவிடும். தன் காதலியின் நினைவு வருவதாக தன் பேக்கில் பவுடரை கொட்டிக்கொள்ளும் நாயகன் ( கற்றது தமிழ் ) . தன் அம்மாவின் செயல்களை போல் செய்யும் நாயகன் தன் அம்மாவின் நினைவுகளால் காதல் வயப்படும் நாயகி
( கருப்புச்சாமி குத்தகைதாரர் ) என நினைவுகள் வெளிப்படும் காட்சி சினிமாவில் அற்புதமானவை. மற்ற திரைக்காவியங்களின் நினைவுகள் என் நினைவுக்கு எட்ட வில்லை. ஒரு மனிதன் எவ்வளவு பெரிய , சுகவாசியாக இருந்தாலும் , கடந்த கால நினைவுகள் வந்தால் அவனும் இழந்தவன் தான். நினைவுகளை கருத்தில் கொண்டு மனிதனுக்கு இயல்பில் ஒரு எதிர்மறை மின்னணு இயந்திரங்கள், தனது ஞபாகத்தில் இருப்பதை நொடிபொழுதில் அழிக்க முடியும் . ஆனால் மனிதனின் ஞாபகத்தை அழிப்பதை அவ்வளவு எளிதல்ல. அவனுக்கு வேண்டாத நினைவுகளை அழிக்க அவன் எதைஎதையோ தேடி போகிறான். மது அதிக நபர்கள் விரும்பும் உடனடி தீர்வாகும். மனிதன் நினைவுகளுக்கு அடிமையென்றால் , நினைவு காலத்திற்கு அடிமை. ஒவ்வோரு மனிதனின் சொல்லபடாத நினைவுகளை காலத்தால் அழிக்க படுகின்றன. 20 வயதை தாண்டும் முன்னே எனக்கு ஏற்பட்ட மூன்று காதல் , நட்பு , பால்யம் என நினைவுகள் இப்போது என்னை அழுத்தமாக பாதிக்கின்றது. என்றோ அர்த்தம் புரிந்தோ புரியமால் நான் எழுதிய இந்த கவிதை இப்போது நினைவில் உதிக்கிறது.

*
நீ
குடிப்பெயரும்போது
வாங்கமால் விட்டுச்சென்ற இசை தட்டை
நான்
இப்பொழுதெல்லாம்
கேட்பதில்லை.
ஏனென்றால் , மெல்ல இசையோட்டத்தால்
உன் நினைவுகளால் நான் அழுது விடுகிறேன்.
*

பால்ய கால சகி

டியூசனுக்கு எனக்கும்
சேர்த்து பேனா
கொண்டு வரும்
உன் சிநேகம்
டியூசன் மிஸ்ஸின்
பிரம்பு அடியையும் மீறி
புத்தகத்தை மறைத்து
வைத்து காதில் கிசுகிசுப்போம்
தினம் இரவு
டியூசன் விடுகையில்
உன் வீட்டு சந்து
திகிலூட்டுவதாய்
வீடு வரை
கொண்டு போய் விட
சொல்லி கைபிடிப்பாய்
உன் வீடு வரை
உன் இடை விடாத
பேச்சு என்னை இதமூட்ட
அன்று விசித்திரமாய்
நீ டியூசன் வராத
பொழுதுகள்
உன் எதிர் வீட்டு
தோழியிடம்
காரணம் கேட்டு
திகைப்படைந்தேன்
சில நாட்களிலே
நீ திரும்பிய
பொழுதொன்றில்
வெட்கத்தோடு
உன் சீர் ஆல்பம்
காண்பித்தாய்
அன்றிலிருந்து
டியூசன் விடுகையில்
உன்னை
கூட்டி போக
உன் அம்மாவோ
அல்லது அப்பாவோ
வர
பழகிக்கொண்டார்கள்.

காதல் பிம்பங்கள்

என்
ஒளி கிணற்றில்
உன் மழைநீர்
பிம்பங்களென
காதல்

உக்கிர தேவி

உன்னோடு சிநேகம்
பேசும் உன் அக்கா
என்னிடம் கோபம்
காட்டுகிறாள்
அது சரி
பெண் தெய்வங்கள்
எப்பவும்
உக்கிரம் காட்டுபவை தானே
உன் அக்காவும் எனக்கு
உக்கிர தேவியே
.
அவள் மேல் ஏற்பட்ட
முறையற்ற காதல்
பெண் தெய்வத்திடும்
வேண்டுதல் போல
யாரும் அறியமால்
இருக்க ...

நீர் உருவம்

பாத்திரத்தில்
நிரம்பும் நீர்
பாத்திரமாகிறது
.
முகத்தில்
வழிந்த நீர்
முகமாகிறது
.
தேகத்தில்
வழிந்த நீர்
தேகமாகிறது
.
அதற்கு
உருவமில்லையென
மயக்குகிறாய்
பாத்திரமாகட்டும்
உன் முகம்
தேகமாகட்டும்
எந்த ஒன்றிலும்
அதன்
உருவத்தை
வரைந்து கொள்ளும்
நீர்

X,Y,Z உடைக்கும் தனிமை

தனிமையை
உடைக்கும் வலு
இருந்தும்
X என்ற ஆண்ணும்
Y என்ற பெண்ணும்
இணைய
அவர்களின்
தீராத பேச்சுகளை
கேட்க
Z என்ற பெண் பிறக்க
அவளுடைய
தனிமைகள்
X ஆலும் , Y ஆலும்
உடைபட
ஒரு கட்டத்தில்
அவளுக்கும்
தனிமை உடைக்கும்
வலு கிடைக்கிறது
ஆனால்
அவள் இன்னோரு
ஆண் துணையோடு
இணைய
Y மரணம் அடைய
X நிர்கதியாகிறாள்
அவள் தனிமையை
உடைக்கும்
வலு இருந்த காலங்கள்
அது Y ஆலும் , A ஆலும்
உடைக்கபட்டது
இந்த தள்ளாடும் வயதில்
X தனிமை
தன்னை
கட்டிப்போட்டபடி
கிடக்கிறாள்
அதை உடைக்க
வலு வேண்டி

பாய் சொற்கள்

பாய் சொற்கள்
விளக்கை
அணைத்து விடு
சாளரத்தை
திறந்து விடு
பிறகு
கனத்த மௌனம்
பிறகு
கதகதப்பு

மாடியில் காயும் துணிகள்

வல்லுறவில் சிதைக்கப்பட்ட
பெண்
குறுகி படுத்திருப்பது போல்
மாடியில் காயும்
துணிகள்
வதைத்த பெண்ணை
அழுக்காறு
எண்ணங்களுடன்
கைவிட்டு சென்ற
ஆண் போல
பெருங்காற்று
தொலைக்காட்சி
உரையாடல்களும்
பெண் கதறும்
ஒலிக்கும்
பேதம் தெரியாத
அண்டை வீட்டுக்காரர் போல
இந்த வெயில்.