Friday, September 28, 2012

உன்னை அணுகுவது

குறித்து வைக்கிறேன்
திட்டமிட்டு
ஜாக்ராதையாக
எதிர்பார்த்தபடி
எதிர்பார்க்கமாலும்
உன்னை எப்படி
அணுகுவதென்று
.
மயிர்கால்கள் சிலிர்கிறது
கை இடுக்குகளில் வியர்த்து
சட்டை நனைந்து விடுகிறது
ஒரு விபத்துக்கு தயாராகிவிட்டேன்

Tuesday, September 25, 2012

உன் மீள் வரவு

மீந்த இந்த இரவு
குளிர் உறைகிறது
என் தேகக்கூட்டில்
கண்கள் இருள் தேடி பிசுபிசுக்க
போர்வைக்குள் முடங்க
சக பறவை கூடு அடையும்
குதூகலிப்பின்றி
உன் வரவை
அறியமால் கிடந்தேன்
மிதமான விசாரிப்புகளுடன்
தொடங்கியது நம் சம்பாஷணைகள்
நீ இல்லாத நாட்களின்
நல்லதையும் அல்லதையும்
பகிர்வதாய் தயாரனேன்
உனக்குள் ஆச்சரியங்கள்
பிளவிட்டிருக்கலாம்
உனக்கான சுவாரசியத்தின் நுனி
பற்ற வைத்த படி
காலி கோப்பையில்
முடியது எனக்கான இரவு

பத்தி 2

பத்தி 2 : . ஒரு விஷயம் எனக்கு பிடிக்கவேயில்லை . ஒரு சாதனையாளன் எப்போது பிறந்தான் மற்றும் அவர் பின்புலம் பற்றிய கேள்விகள் அதில் எந்த சுவாரசியமும் இல்லை தேவையும் கிடையாது அவர் எத்தனை இடர்பாடுகள் கடந்து வந்தார் அவர் வாழ்க்கை சுவராசியங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது . கல்வி தேவையில்லாதை உட்புகுத்துகிறது தற்போதைய மாணவர்கள் சாதனையாளர்கள் சுயபுலம் பற்றி விவரிக்கும் அளவுக்கு அவர் செய்த சுவராசியங்கள் பற்றி அறிவதில்லை .

Sunday, September 23, 2012

தாவரம்

காற்றை இடைமறிந்து
ஸ்பரிசிக்கும் அதே நேரத்தில்
வலை பின்னும் சிலந்திக்கு
கை விரிக்கும் தாவரம்

Saturday, September 22, 2012

காக்கை மனிதர்கள்

பத்தி - 1 : . பொதுவாக காக்கைகள் உணவுக்காக அலையும் , மனிதர்கள் கை ஒங்கினால் பறக்க பாவனை செய்து பின் அமரும். மனிதர்களிடமும் காக்கை தனம் ஒளிந்துள்ளது . சாதுர்யமானவர்களின் கேலி பேச்சுகளில் அடிபடும் அப்படிபட்ட மனிதர்கள் சம்பவ இடங்களிலிருந்து மீள முயன்று பின் தன் காக்கைகள் அல்ல என்பதை உணர்ந்து எதிர்த்து பேசி திரும்பவும் தோற்கிறார்கள் . நானும் கூட சில நேரங்களில் சாதுர்யமானவர்களில் வார்த்தைகளால் அடிபட்டுருக்கேன் . விரட்டபட்டுருக்கேன் . அவர்களின் தலை மறைந்த பின், தன்னை விட தழைத்தவர்களை வார்த்தைகளால் விரட்டியிருக்கேன் . அவர்களும் காக்கை தனம் கொண்டு பறக்க பாவனை பின் செய்து அமர்வார்கள் . அப்படிபட்ட காக்கை தனம் கொண்ட மனிதர்களை ஒரு நாளும் பார்த்ததில்லை உணவுக்காக அலைந்ததை.

Sunday, September 9, 2012

மலர்கிறாய்

தண்டுகுழல் உந்துதலின்றி
மலர்கிறாய்
வண்ணத்துப்பூச்சி களென
உன் சாளரத்தை
மொய்க்கிறேன்

இதழ் முத்தம்

பனி துகள் ஓடும்
உன் உதடு
.
நீ குவளை நீரை
பருகும் லாவகத்தை
லயித்து பார்க்கிறேன்
.
உன் உதடு ஸ்பரித்து
வெகுநாள் ஆகிவிட்டதென்று
உன்னை நெருங்க
ஒரு திருட்டு பூனை
சமையல் அறையில்
உருட்டுவதாய்
விடுவித்து ஒடுகிறாய்
தூரத்திலிருந்த படி
உன்னை ஸ்பரிசிக்கிறேன்

வார்த்தைகளின் இளவரசி

கணக்கற்ற உன் ரகசியங்கள்
வழிகிறது எனக்காக
காரணத்தை கேள்வியாக்கினேன்
.
என் கேள்வியில்
காதல் வழிவதாய்
சந்தேகிக்கிறாய்
என்னை உதற பார்க்கிறாய்
உன் குவளை நீரில்
சிறு துளி யென
சலனபட்டது
.
உன் கவிதை வரிகளை
லயிப்பதாய் யென
உன்னை
வெளிப்படுத்தினா ய்
.
ஏன் இப்படி
பிரயோகிக்கிறாய்
மலர் மலர்ந்து
குழலை காரணித்து
கொண்டாடுவதா
என் குறிப்புகளின்
மூலம் நீ
என் வார்த்தைகளின்
இளவரசி

வெள்ளை தேக பெண்

கறுப்பு முகத்திரை போட்டு
வெள்ளை தேக பெண்கள்
என் கண்ணில்
எதிர்ப்படும் போது
உன் நினைப்பு
வந்து விடுகின்றது
ஜிம்ரின்
உனக்கோ
என்னிடம்
அதிக ஒட்டுதல்
கிடையாது
.
என்னிடம்
பேசும் போது கூட
உன் காதலனின்
என்றோ சுகிந்தாதின்
நினைவுகளோ
அவன் சம்பாஷனைகளோ
உன்னை வதைக்கலாம்
சில்லிட வைக்கலாம்
.
உன் ரகசியம்
பெரும் வழியென அடைய
எத்தனிக்கிறேன்
உன் மத நம்பிக்கைகள்
உன் அப்பாவின்
நடத்தைகள்
காதலனின் குணநலன்கள்
ஏதோ ஒன்று
குறுக்குயிடுவதா ய்
விளைவுகள் உன் தேகத்தில்
கூடுயிடுகின்றது
.
இலையுதிரும் எறும்பு
தண்டு கிளையென
திரும்பி பயணிக்கையில்
பாதை மறக்கப்படுகின்ற து

சம்பாஷிணிளி

பாதி இரவை தின்று விட்டாள்
மீந்த இரவை
நீ நினைவு கூர்ந்ததாய்
என்னிடம் உரையாடல்களை
தொடர்ந்தாள்
.
எனக்கேற்ற தேர்ந்த
சம்பாஷணிளி
என் இருப்பையும்
இந்த இரவையும்
காலி செய்கிறாள்

உன் வதனம்

உன் வதனம் ஜல தெளிவு
ஜலத்தின் கலங்கலை
உன்னை வாசிப்பவன்
எனக்கு தெரியதா
எதுவும் நடந்திருக்கலாம்
எனக்கும் சில கனிப்புகள் உண்டு
.
உன்னோடு காதல் பேசுவது
உன் காதலனுக்கு அலுப்பை
ஏற்படுத்தியிருக ்கலாம்
அல்லது
உன் தோழி உன் காதலனின்
நடவடிக்கையில் அவநம்பிக்கை வெளிபடுவதாய்
ஆலோசித்து இருக்கலாம்
அல்லது
உன் காதலன்
வேறோரு பெண்ணை
சுகிப்பதாக செய்தியறிந்து
நீ சிலிர்ப்பின் பிரதேசமாகியிருக ்கலாம்
.
இலையாகும் நீ
உன் கிளையில் தளைந்திருக்கும்
மற்றோரு இலை நான்
உன்னை அறிக்கும் பூச்சி
என்னையும் அறிக்கும்
பார்த்து கொள்

Sunday, September 2, 2012

அவள் உடல் தடகத்தில் இரு ஆமைகள்

அவள் உடலில்
இரண்டு மிருதுவான ஆமைகள்
முதுகில் தலைமறைத்து வசிக்கிறது
நான் படிக்கையிலோ அல்லது
ஆதர்ச வேலைகளை ஈடுபடும்போது
எனது தோள்களை உரசும்
உரிமை வாங்கி
என் உடல் பாகங்களில்
ஏறி சிலிர்க்க வைக்கும்
பின் கைப்பிடியளவு திணை கொடுத்து
கொஞ்சி விளையாடுவேன்
நன்றி வயப்பட்டு
எச்சில் ஒழுக்கி
இதம் அளிக்கும்
ஒய்ந்து பின்
தலை மறைக்கும்
இதெல்லாம் அஜாக்ராதையான
பொழுதுகளில் சரி
கோபம் தேகம் படரும்
வேளைகளில்
கிளிஞ்சல்கள் உடைந்து
சிதறுவது போல்
பற்களை கடித்து கீரிச்சிட்டு
என்னை விரட்டவும்
செய்யும்