Sunday, September 16, 2018

Fb Status

" புரிந்து கொள்வது " என்றொரு வார்த்தை. "இவன் இதை செய்ய மாட்டான் ", "இவனால் அது முடியாது"  விட்டுக்கொடுப்போம். குடும்பங்களில் உணர்வுபூர்வமாக இது வெளிப்பட்டாலும், நண்பர்களிடம் வினோதமாக வெளிப்படும்.  இங்கே எப்படி யென்றால் -  "பாக்கெட்ல பத்து ரூபாய் கூட இல்லை. நீ எனக்கு
400 ரூபாய் தரனும். உன் நிலைமை எனக்கு புரியுது. ஆனா இப்பவே கொடுத்தா நல்லது. முடியல கண்டிப்பாக அந்த 400 ரூபாய்க்கு மேலே உனக்கு செலவு வைப்பேன்.."

Saturday, September 15, 2018

பழைய உறவுகளில்
ஏமாற்றத்தையும், துரோகத்தையும்
சந்தித்து பக்குவப்பட்டேன்
புதியதாய் நாம்
சந்திக்கிறோம்
உன் சிரிப்பு
இங்கு மகிழ்ச்சியை
நம்பிக்கையை
ஆழமான தெளிவை
தருகிறது
இத்தனை நாள்களின்
வலிகளுக்கு காயங்களுக்கு
தனிமைக்கு
களிம்பு இடுவதாய்
உன் வரவு
நாம் கைகளை கோர்க்கிறோம்
நாம் இங்கு தொடங்குகிறோம்
அழகான புதிய வாழ்வை
தேடியது ஏதோ ஒன்றை
கிடைத்ததை

Thursday, September 6, 2018

விசனம்

சிறிய விஷயங்களை செய்யும்போது என் கவனம் வர வர மலுங்கி வருகிறது. இது முன்னே இருந்து அப்படிதான். ஒரு விசயத்தை எப்படி முடிபது? எதற்காக  செய்கிறோம் ? எப்படி செய்தால் வேலை எளிது.?  என்பது எல்லாம் வரவே மாட்டேன் என்கிறது. கவனம் இல்லை, பயம், ஞாபக மறதி, பொறுமை இல்லாதது. சிறிய விசயங்களை பொறுத்த வரை மட்டும். பெரிய விசயங்களில் போதும் நல்ல கவனம் இருக்கிறது. சிறிய விசயத்தை தவறினால் திரும்ப செய்யலாம் என்ற அலட்சியம். நிர்வாகத்தில் இது சறுக்கை ஏற்படுத்தும். சில உதாரணங்கள் : கடைக்கு போகிறேன் காய்கறிகள், மாசாலா வாங்கிறேன்‌. அரிசி வாங்க மறதி வந்தது. ஒரு இரவு XL இரவல் வாங்கி ஹோட்டல் சென்றேன். பார்சல் வாங்கி விட்டு வேறோருவர் XL ஐ சாவி போட்டு எடுக்க பார்த்தேன், அதற்குள் விஷயம் உணர்ந்து விழிப்புக்கு வந்தேன். வேலை தொடர்பாக பேசுகையில், இரண்டு முறை விளக்கம் கேட்டு செய்கிறேன். இது பெரும் தவறு. இது எங்கே போய் முடிய போகிறது என்று தெரியவில்லை.

Tuesday, September 4, 2018

என் காதல்

இது வரை ஆறு யேழு பெண்களை காதலிக்கலாமா முடிவு செய்துதிருக்கிறேன்.மூன்று பெண்களிடம் காதல் சொல்லி மறுக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் ஒரு வாழ்க்கைகான வழி , பெண்ணை பொறுத்து என் வாழ்க்கையும் மாறியிருக்கும்.வாழ்க்கையை நெறிப் படுத்த இந்து,கிறிஸ்தவம்,மூஸ்லீம்,புத்த இத்தனை மதம் இருக்கும் போது , ஒரு பெண்ணுவோட காதலும் முறித்தால் இன்னொரு பெண்ணுவோட காதல் நாம் வாழ்க்கையை நெறிப் படுத்தும்.( இதை என் இப்போதைய காதலி பார்த்தால் எனக்கு பஞ்சர் ஆகும்). இது என்னுடைய அனுபவம். என் வாழ்க்கையில் அந்த சம்பந்தப்பட்ட பெண்ணுகளுக்கும் சாரசரி மூன்று ஆண்டுகளுக்காவது இடைவெளி இருக்கும். ஒரு ஆண்டில் மூன்று காதலும் எற்படவில்லை, மறுக்கப்படவில்லை, கடந்து போகவில்லை. இத்தனைக்கும் குடும்பம் , வாழ்க்கையில் அத்தனை இஷ்டமும் இல்லை. ஒவ்வொரு காதலும் ரசனையானது. அது ஒரு காலம் திரும்பி பார்க்கும் போது இழந்தவானாக பதற்றம் அடைகிறேன்.இருந்தாலும் கடைசியாக நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் , எழுத்தை சொல்லி தந்த அனைத்து பெண்ணுக்களுக்கும். - என்னுடைய முதல் புனைவு இது. இந்த பத்தி உண்மையான ஒன்றாககாவும் , புனைவற்ற தன்மையில் தனிமையில் நிற்கிறது.

சுயம் கவிதைகள்

எந்த விஷயத்திற்கு
கோபம் படறதுனே தெரியல.
.
சிம்பிள்.
கோபம் வந்தா
கோபம் படு ....
.
ஓரே பிரச்சினையை போட்டு
ஓலட்டது மனசு 
அதுவும் புதுசா 
எதாவது பிரச்சினை
வர வரைக்கும் தான்
அதுக்கு அப்பறம்
முன்னாடி நடந்த
பிரச்சினை பத்தி
ஏன் னெ கூட
கேட்கமாட்டிங்குது...
.
உலகம் அப்படி தான் சொல்லும்
அதுக்கு வேற வேலையில்லை
உனக்கு வேலையிருக்கா ?
நீ செய்
.
எனக்கு ஒருத்தன் வேணும்
நான் செய்ச எல்லா தப்பும்
அவன் செய்யனும் 
அப்போ தான் 
நானும் இன்னும்
நிறைய தப்பு
செய்ய முடியும்
.
மழை பிடிக்கும்
மழையில் நனைய பிடிக்காது.
.
சில நேரம் எல்லாதையும்
தூக்கி எறியலாம் தோணுது
என்னையும் கூட.....
.
நீ நீயாக இருக்க முடியும்
அடுத்தவனிடம் கண் மூக்கு வாய் வாங்கி 
அவனை போல ஆக முடியாது... 
.
நேரம் போவதற்காக படித்ததுண்டு
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன் கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது. 
.


எழுத்து

நேரம் போவதற்காக படித்ததுண்டு
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த  மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன்  கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது.

காதல் புனைவு

இது வரை ஆறு யேழு பெண்களை காதலிக்கலாமா முடிவு செய்துதிருக்கிறேன்.மூன்று பெண்களிடம் காதல் சொல்லி மறுக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் ஒரு வாழ்க்கைகான வழி , பெண்ணை  பொறுத்து  என் வாழ்க்கையும் மாறியிருக்கும்.வாழ்க்கையை நெறிப் படுத்த இந்து,கிறிஸ்தவம்,மூஸ்லீம்,புத்த இத்தனை மதம் இருக்கும் போது , ஒரு பெண்ணுவோட காதலும் முறித்தால் இன்னொரு பெண்ணுவோட காதல் நாம் வாழ்க்கையை நெறிப் படுத்தும்.( இதை என் இப்போதைய காதலி பார்த்தால் எனக்கு பஞ்சர் ஆகும்). இது என்னுடைய அனுபவம். என் வாழ்க்கையில் அந்த சம்பந்தப்பட்ட பெண்ணுகளுக்கும் சாரசரி மூன்று ஆண்டுகளுக்காவது  இடைவெளி இருக்கும். ஒரு ஆண்டில் மூன்று காதலும் எற்படவில்லை, மறுக்கப்படவில்லை, கடந்து போகவில்லை. இத்தனைக்கும் குடும்பம் ,          வாழ்க்கையில் அத்தனை இஷ்டமும் இல்லை. ஒவ்வொரு காதலும் ரசனையானது. அது ஒரு காலம் திரும்பி பார்க்கும் போது இழந்தவானாக  பதற்றம் அடைகிறேன்.இருந்தாலும்  கடைசியாக நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் , எழுத்தை சொல்லி தந்த அனைத்து பெண்ணுக்களுக்கும். - என்னுடைய முதல் புனைவு இது. இந்த பத்தி உண்மையான  ஒன்றாககாவும் , புனைவற்ற தன்மையில் தனிமையில்  நிற்கிறது.

Friday, August 31, 2018

ஆகஸ்ட் 25, 2014

பஸ் படியில் தொங்குவது
ஒரு வகை தியானம்
விளிம்பில் ஏன்
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாய் ?
வாழ்க்கை தள்ளி விட்டுறோம்
பயமா
இந்த முறை இருக்கலாம்
அடுத்த முறை இல்லமாலும் போகலாம்
அதுக்காக ...
" டேய் கோ* முதல்ல எறி மேலே வாடா

நவம்பர் 4, 2014

முதல் காதல் என்னை தூக்கி எறியும் போது
பெரிதா வயது ஏதும் இல்லை
இழப்பு , தோல்வி வயது
பார்க்குமா
நினைப்பு மட்டும் நீண்ட நாளுக்குக்காக இருந்தது
பெரிய தொலைவு
பிடிப்பு இல்லாத பெரிய பாலத்தில்
பெரிய ஆபத்தான பயணம்
பிறகு மறுபடியும் வேற காதல்
பீலிங்க் பிரச்சினை தொல்லைக்கு
நிறம் இருக்கு
அது பொண்ணை பொறுத்து
மறுப்படும்
வேற பொண்ணு
வேற பீலிங்கு
வேற பிரச்சினை
வேற தொல்லை
இது பொதுவானது
காதல் காதலி பழகிய பிறகு
போதும் விட்டா போதும் சாமி -நெ
இருக்கும்

ஆகஸ்ட் 30, 2014

முத்தங்கள் பற்றி உனக்கு என்ன ?
நான் உன்னை பட்டினி
போடரனா ?
நீ தான் எங்கிட்ட இருந்து
பிடிக்கிக்கனும்
அது உன் சாமர்த்தியம்
நீ சொல்றதா நம்ப முடியுமா
அப்படியே கழுவிட்டு
அய்யோ பயமா இருக்குனு நழுவுவாறவ நீயாதான்
இருக்க முடியும்
சின்ன சின்ன முத்தங்கள்ல
இத்தனை நாள் பழகின
ஞாபங்ககளை தூக்கிப் போட்டாயே
ம்ம்ம்ம் ... போதுமா
ம்ம்ம்ம் ... போதுமா
எத்தனை முறை கெஞ்சிக்கேட்டாலும்
முத்தத்தை அழுத்தி தர மட்டும்
உனக்கு தெரியவே தெரியாது

ஜூன் 7 , 2015

சண்டை - கவிதை
.
என்னை சுற்றியவர்கள்
யாரும் எனக்கு அவர்கள்
சொன்னபடி நடப்பதில்லை
சில செயல்களின் மூலம்
அதிருப்தியை ஏற்படுத்துகிறார்கள்
நீயும் இப்படியே பிரதிபலித்தால்
தங்கிக்கொள்ள முடியவில்லை
என் முழு கவனமும்
உன் மேல் தான்
நீ சின்ன சின்ன எதிர்ப்பார்ப்புகளை
நிறைவேற்றாத போது
நமக்குள் சண்டை பிறக்கிறது
இதே போல் தான்
நானும் உனக்கும்
பாதி சண்டை நிறுத்தும் போது
வார்த்தைகள் தொங்கி நிற்க
என்னோடு பேசமால் இருக்க
உன்னால் மட்டும் முடிகிறது
நினைத்தால் விரக்தியாகவும்
பயமாகவும் இருக்கிறது
பெரும்பாலும் எல்லா சண்டையும்
முடிந்த பிறகும்
உன்னோடு பேசவும்
கொஞ்சவும் என்னிடம்
வார்த்தைகள் கிடக்கிறது
உன் கனத்த மௌனம் தான்
வலிக்கிறது...

Thursday, August 23, 2018

24.8.2018

மொட்டை மாடி
பால்கனி
நட்சத்திர வெளி
புகை மாய நிலா
தெரு  நிசப்தம்
ஆபிஸ் பிரசர்
தினமும் வன்புணரும்
ஆபிஸ்
ஒரே ஒரு தம்
ஒரு அழுத்தமான
இழுப்பு
புகை தள்ளியும்
கட்டுக்கடங்காத மனம்
மூத்திரம் பேய்கிறேன்
எதிர் மாடி நனையும்
வரை ...


Monday, August 20, 2018

21.8.2018

இரு வருடங்களுக்கு முன்பு
நீ உன் அம்மாவையும்
நான் என் காதலையும்
இழந்திருந்தோம்
மரணம் ஈடு செய்யுமா ?
நான் சாவு ஒன்றே
என்ற மனநிலையில்
இருந்தேன்
சாவுக்கு போகாத
மன தைரியம்
உனக்கு
சகோதரத்துவம் தாண்டிய
நட்பு நம்மிடம் இருந்தது
நட்பை தாண்டி அன்பு ஈர்ப்பு
இருந்தாக தெரியவில்லை
எனக்கு ?
சில காலம்
நாம் உறவு நன்றாக
சென்றுக்கொண்டிருந்தது
சின்ன சின்ன சம்பவங்கள்
ஒரு இரவு
நன்றாக நினைவிருக்கிறது
நீ உன் அம்மாவின் இழப்புகளை
பற்றிய கஷ்டங்களை
என்னிடம் கொட்டிக்கொண்டிருந்தாய்
கேட்டபடி
இந்த வாழ்க்கை நிலையானது
இல்லை
இறப்பை பற்றிய யதார்த்தை
பேசி ஆறுதல் சொன்னேன்
அப்போது நீ உன் சித்தி குடும்பத்தில்
இருந்தாய்
வேலைக்கு போக போவதாக
சொல்லிக்கொண்டிருந்தாய்
நான் யாருக்கும்
சுமையாக இருக்க விரும்பவில்லை
என்பது மையமாக இருந்தது
சில நாட்களிலேயே
நாம் பிரிவு நிகழ்ந்தது
எதிர்பார்க்காதது
நீ என்னோடு இருந்திருக்கலாம்
உன் மொபைல் நம்பரை
தவிரவிட்டது
எவ்வளவு தூரததிஷ்டம்
இழப்பின் வலிகள்
என் நண்பன் அடிக்கடி
நினைவுபடுத்துவான்
அம்மு என்ன ஆனாள்
யென்று
வெறுமனே நாட்கள்
மட்டும் போனது
எந்தவித சுவராசியம்
இல்லாமால்
எந்த பெண் நட்பு
இல்லாமால்
குறிப்பாக நீ இல்லாமால்
பிறகு ஒரு நாள்
விசயம் சொன்னாய்
உனக்கு வரன் பார்த்து
முடிவானதாக...
நல்ல விசயம்
நான் நீ தான்
எனக்கு ஒரே
ஆறுதல் என
திரும்பி வந்தவனுக்கு
அது சரியான அடி
பிறகு நான் பேசிய வார்த்தைகள்
எதற்காகவும்
நீ திரும்பி வருவதாக
இல்லை
இப்போது கூட
தெரியவில்லை
உன் கல்யாணம் பற்றி
நீ திரும்பி வந்திருப்பது
எவ்வளவு பெரிய ஆறுதல்
என்று உனக்கு தெரியாது
நான் எழுதும் ஒவ்வொரு
வார்த்தைகளும்
உன்னை எப்படி
தக்க வைத்துக் கொள்வதற்காக
மட்டும் இருக்கும் ...
நன்றி

Saturday, August 18, 2018

18.08.2018

ஒரு விசனம்
.
சின்ன விஷயங்களின் டேட்டா
அதை தெரிந்துக்கொள்ள முயலாதது
பெரும் அலட்சியமாக வளர்கிறது
இதே பெரிய விசயங்கள்
சிலது நல்லது கூட
சில அற்ப ரகசியங்கள்
அறிந்து கொள்வதன் ஆர்வம்
இரட்டிப்பாக வளர்கிறது ...

Friday, August 10, 2018

10.8.2018

என் கண்ணீரை துடைக்க
நீ இல்லை
சக மனிதர்கள் இரு அன்பானவர்கள் விட
தனிமையில் இருபவர்கள்
என்ன பெரிதாய்
வாழ்ந்திட போகிறார்கள்
வாழ்நாள் கொஞ்ச காலம் தான்
வீழ்வோம் எல்லோரும்
இந்த தனிமையான காலத்தின்
வடுகள்
எனக்கு மட்டுமே...
யாரும் இருக்கும் போது
அவர்கள் அருமை தெரியாது
எனக்கும் நீ அப்படியே
எத்தனை பேர்
கேள்விப்படுகிறோம்
பிரிந்தவர்கள் சேரும் போது
நாமும் எவ்வளவு
மகிழ்ச்சி கொள்கிறோம்
அதே நேரங்களில்
நிராசை போன
அனைத்து காதலுக்கும்
நாம் வருந்துகிறோம்
நீயும் என்னோடு
இருந்திருக்கலாம்
சிரிப்பிலிருக்கும் நீ
என்னோடு வலிகள்
ஏதும் அறியபோவதில்லை
கஷ்டமே வரக்கூடாது என
பேராசை எனக்கில்லை
எத்தனை கஷ்டம் வந்தாலும்
நீ இருப்பாய் என்றிருந்தால்
எல்லாம் எவ்வளவு சுலபம்
நான் வேண்டாம் என்றிருப்பவள்
உனக்கும் எனக்கும்
என்ன பந்தம் இருக்கிறது
கர்வம் சிலநேரம்
இந்த இளமையில்
என்னை அதீத அளவில்
நேசித்தது வேறு
யாருமில்லை
ஈடு செய்ய முடியமால்
உன்னையே திரும்ப
நினைக்கிறது மனம்

தனிமையில் கண்ணீர்
போதும் கடவுளே...

Tuesday, August 7, 2018

07.08.2018

நேற்று நிகழ்கிறது
வழக்கமான திங்கள்களில்
வேலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்
வழியெங்கும் கண்ணீர்
வற்றிப்போகும் அளவிற்கான
கண்ணீர்
அந்த அளவில் வலி
என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான
நகர்வு சரியான
திட்டமிடல் இல்லததால்
கைநழுவுகிறது
கடந்த மூன்று ஆண்டுகளில்
ஆசை விருப்பம் தேவை
நிறைவேற்றிக்கொள்ள
முடியாத
தகுதியில்லதாவனாக இருக்கிறேன்
முயற்சி முயற்சிகளாக
ஒரு கட்டத்தில் தோல்வி
திரும்பவும் முயற்சி
மீண்டும் ஏழ முடியாத இழப்பு
என் பணி சூழல்
நான் ஏன் இங்கு
வேலை செய்கிறேன்
கேள்வி பதில் தெரியாதது
என் சமவயதினர்
சமமாக படிப்பை முடித்தவர்களில்
குறைந்த சம்பளத்தில்
வேலையில் இருப்பவன் நான்
ஒருவனே...
குடும்பத்திற்கு கொடுக்க
சரியான பணமில்லை
நினைத்ததை வாங்க முடிவதில்லை
உடுத்த நல்ல உடை
இல்லை
என் முகத்தில்
இழப்பின் வடுக்கள்...
எனது முகம்
இளமைக்கான பிரகாசம் இல்லை 
செயல்களில் துடிப்பு இல்லாமையும்...
.
கடந்த மாதங்களில் நிகழ்ந்தது இது
சொந்தம் வழியாக
பேசப்பட்ட வரன்
பேசி மறுக்கப்பட்டது
சாம்பத்தியம் குடும்பத்திற்கு போதாது
என தயங்கினாலும்
வாழ்விற்கான விடியலை
எதிர்பார்த்திருந்தேன­்
.
இந்த மாதங்களில்
பழைய காதலின் நினைவே
வேறு ஏதும் நிகழாமல்
கர்வம் குறைந்து
அவள் நினைவில்
ஒன்றேன லயிக்கிறேன்
அவள் புகைப்படங்களை புரட்டுவது,
அவள் இருந்த இடங்களை
கடந்து செல்வது
வலியோடு இதமான சுவடுகள்...
அவளை அறிந்த நண்பர்களிடம்
அவள்  திருமணம் குறித்து அறிந்துக்கொள்ள
முயல்வது
ஒரு மீள் வதம்.
அதே நேரங்களில்
அவள் பிரிவு இருவருக்கான நன்மை
என்பதில் தெளிவு
நிலைகுலைய செய்கிறது ...
எதையும் பெறுவதற்கான
அதிர்ஷ்டம் இல்லை
உறவில் கூட
இது தொடர்கிறது...