Thursday, September 6, 2018

விசனம்

சிறிய விஷயங்களை செய்யும்போது என் கவனம் வர வர மலுங்கி வருகிறது. இது முன்னே இருந்து அப்படிதான். ஒரு விசயத்தை எப்படி முடிபது? எதற்காக  செய்கிறோம் ? எப்படி செய்தால் வேலை எளிது.?  என்பது எல்லாம் வரவே மாட்டேன் என்கிறது. கவனம் இல்லை, பயம், ஞாபக மறதி, பொறுமை இல்லாதது. சிறிய விசயங்களை பொறுத்த வரை மட்டும். பெரிய விசயங்களில் போதும் நல்ல கவனம் இருக்கிறது. சிறிய விசயத்தை தவறினால் திரும்ப செய்யலாம் என்ற அலட்சியம். நிர்வாகத்தில் இது சறுக்கை ஏற்படுத்தும். சில உதாரணங்கள் : கடைக்கு போகிறேன் காய்கறிகள், மாசாலா வாங்கிறேன்‌. அரிசி வாங்க மறதி வந்தது. ஒரு இரவு XL இரவல் வாங்கி ஹோட்டல் சென்றேன். பார்சல் வாங்கி விட்டு வேறோருவர் XL ஐ சாவி போட்டு எடுக்க பார்த்தேன், அதற்குள் விஷயம் உணர்ந்து விழிப்புக்கு வந்தேன். வேலை தொடர்பாக பேசுகையில், இரண்டு முறை விளக்கம் கேட்டு செய்கிறேன். இது பெரும் தவறு. இது எங்கே போய் முடிய போகிறது என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment