Sunday, February 17, 2013

கிறிஸ்துவ பெண் துறவி

மாலை நேர நகர சாலையில்
ஒரு கிறிஸ்துவ பெண் துறவியை
சந்தித்தேன்
காவி நிற உடை
அவளுக்கு மட்டும்
நீண்ட கை ரவிக்கைகள்
பிரகாசமான வதனம்
பொன்னிற சிலுவை போட்ட செயின்
அகன்ற கழுத்தில்
எல்லா ஆண்களையும்
சகோதரன் யென
அழைக்க தெரிந்திருக்கிறது
சற்றென்று அவள் அறையை பற்றிய
கீற்றலாய் ஒரு எண்ணம்
காய்ந்த இலைகள்
காற்றில் உராயும்
தனிமையான பல நேரங்களை அவள்
அங்கே கடந்திருக்கலாம்.

1 comment:

  1. சகோதரன் யென
    அழைக்க தெரிந்திருக்கிறது// இருக்கலாம்

    ReplyDelete