Sunday, March 9, 2014

உன்னிடம் திராட்சை வாசம்

. மல்லிகை பூக்களை நினைவுறுத்தும் நீ இப்போழுது திராட்சையை நினைவுறுத்துகிறாய் - ஆசுவாசமாய் அமர்ந்து தட்டு நிறைய திராட்சைகளை ஒவ்வொன்றாய் உன் இரண்டு விரல்களால் பொருத்தி எடுத்து சுவைக்கும் காட்சி போதையில் திழைக்க வைக்கக்கூடியது. மனம் முடித்த முதல் நாளில் , பல பழங்களை கூறு போட்டு உங்கள் இருவர் முன்னால் வைக்கப்பட்டப்போது அதில் ஒன்று இரண்டு திராட்சைகளை எடுத்து சுவைத்தாய். பின் இரவுகளில் உன் இதழ்களை உன் கணவன் சுவைத்த போது உன் இதழ்களிலிருந்த திராட்சை வாசம் இல்லமால் போனதாகவே நம்பினாய். நீயே ஒரு திராட்சை தோட்டம் என்பதை மறந்தாய். அந்தரத்தில் தொங்கும் இரண்டு திராட்சைகள் உன் கரு விழிகள். முகத்தை விட்டு உடலுக்கு கிழிறங்கிய போது உன்னிடம் திராட்சைகளை கண்டதாக, அதை உனக்கு தரமால் சுவைத்தான். அதைதான் நீயும் சுவை என்றாய் . உன் சின்ன சின்ன மச்சங்கள் மழலை திராட்சைகளாக கண்டான். அன்பு , வாழ்க்கையும் திராட்சைகளே. சில புளிப்பு திராட்சைகள் கஷ்டமெனில் , ஒரு இனிப்பான திராட்சை அதை ஈடு செய்யும். வேலை தொடர்பாக அயல் நாடு சென்று விட்ட உன் கணவனின் பிரிவை அலமாரியில் இருக்கும் கணவனின் புகைப்படத்தின் தூசுக்களை உன் சேலை முந்தானையால் துடைக்கும் போது உணர்கிறாய் - பிரிவு , காதல் , வலி அங்கே உன்னுடைய சில கண்ணீர் துளிகள் விழுந்து நிறைகிறது. ”இந்த திராட்சை புளிக்கிறது" என உனது இதழ்கள் உதிர்க்கிறது.

No comments:

Post a Comment