Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, September 4, 2018

சுயம் கவிதைகள்

எந்த விஷயத்திற்கு
கோபம் படறதுனே தெரியல.
.
சிம்பிள்.
கோபம் வந்தா
கோபம் படு ....
.
ஓரே பிரச்சினையை போட்டு
ஓலட்டது மனசு 
அதுவும் புதுசா 
எதாவது பிரச்சினை
வர வரைக்கும் தான்
அதுக்கு அப்பறம்
முன்னாடி நடந்த
பிரச்சினை பத்தி
ஏன் னெ கூட
கேட்கமாட்டிங்குது...
.
உலகம் அப்படி தான் சொல்லும்
அதுக்கு வேற வேலையில்லை
உனக்கு வேலையிருக்கா ?
நீ செய்
.
எனக்கு ஒருத்தன் வேணும்
நான் செய்ச எல்லா தப்பும்
அவன் செய்யனும் 
அப்போ தான் 
நானும் இன்னும்
நிறைய தப்பு
செய்ய முடியும்
.
மழை பிடிக்கும்
மழையில் நனைய பிடிக்காது.
.
சில நேரம் எல்லாதையும்
தூக்கி எறியலாம் தோணுது
என்னையும் கூட.....
.
நீ நீயாக இருக்க முடியும்
அடுத்தவனிடம் கண் மூக்கு வாய் வாங்கி 
அவனை போல ஆக முடியாது... 
.
நேரம் போவதற்காக படித்ததுண்டு
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன் கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது. 
.


எழுத்து

நேரம் போவதற்காக படித்ததுண்டு
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த  மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன்  கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது.

Friday, August 31, 2018

ஆகஸ்ட் 25, 2014

பஸ் படியில் தொங்குவது
ஒரு வகை தியானம்
விளிம்பில் ஏன்
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாய் ?
வாழ்க்கை தள்ளி விட்டுறோம்
பயமா
இந்த முறை இருக்கலாம்
அடுத்த முறை இல்லமாலும் போகலாம்
அதுக்காக ...
" டேய் கோ* முதல்ல எறி மேலே வாடா

நவம்பர் 4, 2014

முதல் காதல் என்னை தூக்கி எறியும் போது
பெரிதா வயது ஏதும் இல்லை
இழப்பு , தோல்வி வயது
பார்க்குமா
நினைப்பு மட்டும் நீண்ட நாளுக்குக்காக இருந்தது
பெரிய தொலைவு
பிடிப்பு இல்லாத பெரிய பாலத்தில்
பெரிய ஆபத்தான பயணம்
பிறகு மறுபடியும் வேற காதல்
பீலிங்க் பிரச்சினை தொல்லைக்கு
நிறம் இருக்கு
அது பொண்ணை பொறுத்து
மறுப்படும்
வேற பொண்ணு
வேற பீலிங்கு
வேற பிரச்சினை
வேற தொல்லை
இது பொதுவானது
காதல் காதலி பழகிய பிறகு
போதும் விட்டா போதும் சாமி -நெ
இருக்கும்

ஆகஸ்ட் 30, 2014

முத்தங்கள் பற்றி உனக்கு என்ன ?
நான் உன்னை பட்டினி
போடரனா ?
நீ தான் எங்கிட்ட இருந்து
பிடிக்கிக்கனும்
அது உன் சாமர்த்தியம்
நீ சொல்றதா நம்ப முடியுமா
அப்படியே கழுவிட்டு
அய்யோ பயமா இருக்குனு நழுவுவாறவ நீயாதான்
இருக்க முடியும்
சின்ன சின்ன முத்தங்கள்ல
இத்தனை நாள் பழகின
ஞாபங்ககளை தூக்கிப் போட்டாயே
ம்ம்ம்ம் ... போதுமா
ம்ம்ம்ம் ... போதுமா
எத்தனை முறை கெஞ்சிக்கேட்டாலும்
முத்தத்தை அழுத்தி தர மட்டும்
உனக்கு தெரியவே தெரியாது

ஜூன் 7 , 2015

சண்டை - கவிதை
.
என்னை சுற்றியவர்கள்
யாரும் எனக்கு அவர்கள்
சொன்னபடி நடப்பதில்லை
சில செயல்களின் மூலம்
அதிருப்தியை ஏற்படுத்துகிறார்கள்
நீயும் இப்படியே பிரதிபலித்தால்
தங்கிக்கொள்ள முடியவில்லை
என் முழு கவனமும்
உன் மேல் தான்
நீ சின்ன சின்ன எதிர்ப்பார்ப்புகளை
நிறைவேற்றாத போது
நமக்குள் சண்டை பிறக்கிறது
இதே போல் தான்
நானும் உனக்கும்
பாதி சண்டை நிறுத்தும் போது
வார்த்தைகள் தொங்கி நிற்க
என்னோடு பேசமால் இருக்க
உன்னால் மட்டும் முடிகிறது
நினைத்தால் விரக்தியாகவும்
பயமாகவும் இருக்கிறது
பெரும்பாலும் எல்லா சண்டையும்
முடிந்த பிறகும்
உன்னோடு பேசவும்
கொஞ்சவும் என்னிடம்
வார்த்தைகள் கிடக்கிறது
உன் கனத்த மௌனம் தான்
வலிக்கிறது...

Friday, April 25, 2014

மான்சியின் பிங்க்


வெள்ளை நிறத்தின் தேவதையான
மான்சி பிங்க் நிறத்தின்
பைத்தியக்காரியாக இருக்கிறாள்
பிங்க் டாப்
பிங்க் பாட்டம்
பிங்க் வளையல்கள்
பிங்க் காதணிகள்
பிங்க் ஸ்டிக்கர் பொட்டுகள்
பிங்க் நெகபாலீஸ்
பிங்க் வார் செருப்புகளென
தினம் ஒன்றை அணிந்தவளாக
ஃபேஸ்ட்வீல் மூடில்
திழைக்க செய்கிறாள்
செர்ரி பழத்தின்
சுவை ஏற்படுத்துகின்ற
அவள் உடலில்
பழுத்திருக்கும் மயக்கு முடுச்சுகள்
பிங்க் நிறத்தில்
இந்த நாளில் புதிதான
கட்ஸூக்களை
அணிந்து வந்து கழட்டி
ஏறிந்தவளின்
பளிங்கு கால்கள்
பிங்க் நிறத்தில்
வியர்த்திருக்கிறது.
.
பிங்க் வார்த்தைகளால் தொடங்கும் மான்சிக்கு
ஒரு அதிர்ச்சியை வைத்திருக்கிறேன்
மான்சிக்கு எதனால் பிங்க் பிடிக்கும் கேட்டபடி
அவளை நெட்டி தள்ளி
முத்தங்கள் ஏய்திய பின்
இந்த ஆழ்ந்த காதலில்
அவளுக்கும் ஈடுபாடாம் என்பேன்

Friday, March 22, 2013

மோட்டர் வாகனங்கள் , பிளெக்ஸ் போர்டுகள் , இராட்சத கட்டிடங்கள் .

சிலருக்கு இருப்பதைப்போல
எனக்கென ஒரு மோட்டர் வாகனம்
இருக்கிறது
நானும் அதுவும் மாறிமாறி
துரோகம் இழைப்பதற்காக
எதிர்படுவோர்களிடம் பேசிவைத்திருக்கலாம்
.
உடல் நசுங்கி கை கால் அகன்று
தலை நசுங்கி எத்தனை இழப்புக்கள்
குழந்தைகளை கூட
விட்டுவைப்பதில்லை
நாளும் பார்க்கிறோம்
வென்கியூப் நகரத்தில் தொடங்கி
பல நகரங்களில்
வாகனத்தை தலைகீழாகவும்
எப்படியும் ஓட்டுவதற்கு
ஆள் இருக்கிறது
இழப்புக்களை கண்கொள்ளமால்
அப்படியொரு முயற்சி
மரணத்தையே வென்றதாகப்படும்
அப்படி ஆக முனைப்பு
கூடுகிறது
.
சக நண்பன் விபத்தில் மாண்ட
செய்தி கேள்வியுற்று
எரியூட்டும் விழாவுக்கு
சென்றிருந்தேன்
இனி அவனை காண முடியாது
என்ற எண்ணம் மேலூங்கி
தொண்டை அடைந்து
அழுகை வர
அடக்கி கொண்டேன்
பின் நாட்களில்
பயணங்களில் நெடுங்சாலைகளில்
அவன் பிரேதம் தேடி
அழைந்திருக்கேன்
பைத்தியகாரனாக
.
நோய் வந்தால் கூட
தெரிந்த இடத்தில் மரணம்
விபத்துக்கள் தெரியாத இடங்களில்
துன்பம் இழைக்கிறது
வாகனங்களை கண்டால்
அயர்ச்சி அளிக்கிறது
அதன் ஒவ்வொரு
எந்திர பாகத்திலும்
மரணத்தின் திசுக்கள் ஒட்டியிருக்கிறது
என் மொத்த சகாப்த்தையும் அடக்கி
அதன் முன்னர்
வணங்கி விழுகிறேன்
.
என் பரிணாம பய உணர்வுகள்
சில நாட்களுக்கு முன்பு
பிளேக்ஸ் போர்டுகள் மீதும்
அதற்கும் சில நாட்களுக்கு முன்பு
இராட்சத கட்டிடங்கள் மீதும் இருந்தது.

Thursday, March 14, 2013

அவள் வதனத்தில் வளர்ந்த என் பதின்ம மரம்

என் பதின்மங்களில்
வெயிலோடு ஒட்டிக்கொண்டிருந்தேன்
எனக்கு உகந்த காலமென்று
தொலைப்பதே மீள் தேடலுக்கு தான் யென
கடந்து வந்திருக்கையில்
எல்லாமுமாக ஒரு பெண்
வந்திருந்திருந்தாள்
அவள் வதன நிழலில்
இளம் பச்சை இலைகளை கொண்ட
தாவரத்தை வளர்த்தேன்
பச்சை கனிகள்
இலைகளுள் மறைந்தது
உதிரும் முதிர் இலைகளை
அள்ளி வீசியெறிந்தேன்
அங்கே கூடுயிடும்
பறவைகளை கண்டு
மகிழ்வுற்றேன்
பின் நாளில்
அவளும் அதே தாவரத்தை
வளர்த்தாகவும்
சில நாட்களில் தளர்ந்துவிட்டதாக
ஒரு இரவில்
கேள்வுயுற்று அதிர்ந்தேன்.

Sunday, February 17, 2013

கிறிஸ்துவ பெண் துறவி

மாலை நேர நகர சாலையில்
ஒரு கிறிஸ்துவ பெண் துறவியை
சந்தித்தேன்
காவி நிற உடை
அவளுக்கு மட்டும்
நீண்ட கை ரவிக்கைகள்
பிரகாசமான வதனம்
பொன்னிற சிலுவை போட்ட செயின்
அகன்ற கழுத்தில்
எல்லா ஆண்களையும்
சகோதரன் யென
அழைக்க தெரிந்திருக்கிறது
சற்றென்று அவள் அறையை பற்றிய
கீற்றலாய் ஒரு எண்ணம்
காய்ந்த இலைகள்
காற்றில் உராயும்
தனிமையான பல நேரங்களை அவள்
அங்கே கடந்திருக்கலாம்.

Saturday, December 29, 2012

போர்னா வலைதள பெண் தேகம்

சோகத்தின் ரேகைகளென
வெயில் வெளிச்சம்
சாளரம் வழி
கணினி திரையில் விழுந்திருந்தது
.
அவன் தேடி பார்த்த
ஒரு போர்னா வலை தளத்தில்
.
அவளை சார்ந்தவர்களுக்கு
துரோகம் இழைப்பதாக இருந்தாள்
.
அவள் உடைகளோடு
சரீரமும் நனைந்திருந்தது
.
அவள் யோனி காய்ந்திருந்தது
.
பல திணுசுகளில்
அவள் வன்மையாக புணரப்பட்டாள்
.
இவன் முறையில்
.
அவள் குளிக்க நீர் வாரினான்
.
துணி அலமாரியில்
அவனுக்கு பிடித்த
சேலை யொன்றை
அவளுக்காக தேர்ந்தெடுத்தான்
.
மென்மையாக அவளை அணுகினான்
காலத்தை தாமதப்படுத்தி
.
கிளைகள் நீண்டு வளர்ந்த
ஒரு மரத்தின் கீழ் அவன் அமர்ந்திருந்தான்
.
அவள் வீடு இங்கேயே
எங்கேனும் இருக்கலாம்
.
இந்த மதிய வேளையில்
சாளரம் வழி வெயில்
அவள் சரீரத்தில் விழுந்திருக்க
தூங்கி கழித்துக்கொண்டிருப்பாள்




Monday, December 17, 2012

ஆடையில்லமால்

நிலத்தை இரு கூறாக பிரித்து
நதியாழலிருந்த என்னை
தேர்ந்தெடுத்திருந்தது
சிவந்து பழுத்த சூரியன்
சொத சொத வென
ஒப்பியிருந்தது தேகம்
மாமிசம் தின்று விட்டு
மலை முகட்டுக்கு எதிரே பறந்த
பறவையின் அலகிலிருந்து
கிளம்பிய குருதி வாசம்
எனக்கு பசியை நினைவுபடுத்தியது
உடனே நதிமீன்களை கைகளால்
பிடிக்க முயன்று தோற்றேன்
விந்து கசிந்து நனைந்த
ஆடைகளை அலச
அதை திங்க வந்த
மீன்களை ஆடைகளால்
கொய்தேன்
போதுமென கரைக்கு திரும்பி
மேலாடை அவிழ்த்து
செடிகளின் மேல்
உலர காய போடுகையில் தான்
அவன் இருப்பதையே கவனித்தேன்
அன்றிலிருந்து
மேல் ஆடையில்லமால்
அவன் முன் இருக்க
பழகி கொண்டேன்

Saturday, December 8, 2012

இச்சை காதல்

தன் காதலனோடு சந்திப்பு பற்றிய
டைரி ஒன்றை
"டோன்ட் ஒபன் மை பெர்சனல்"
யென எழுதி
புத்தக அரங்கில்
மறைக்கலனாள்
ஒரு விஷம நாளில்
கண்டறிந்த வீட்டார்
அவளை கிழித்தனர்
கிழித்த டைரியையும்
புத்தக மூட்டையும்
கொளுத்த போன அப்பாவை
விம்மி தடுத்தாள்
இணைய பாலியல்
காணோளிகளில் தேக காட்டியவளோடு
அவள் ஒப்பீடப்பட்டாள்
அடுத்த நாள் காலையில் குளிக்கையில் விம்மிய படி
தன் கைகளை பிளேடால்
கிழிக்கலனாள்
.
இரவு சண்டைக்கிடையே
அவள் அண்ணன்
தொலைப்பேசி அரட்டைகளில்
ஒரு பெண்ணோடு
புணர் மொழி பேசலனான்
விடுமுறை முடிந்து
ஹாஸ்டல் பிரயாணப்படும் அவளை
சந்திக்க அதிகாலையிலே
கிளம்பினான்
பேருந்து நிலையத்திற்கு
.
மேற்கொண்டு
டைரியின் வழி அறியப்படும்
அவளின் காதலன்
இரண்டு நாள்
குடிபோதையில் ஏற்பட்ட
தன் காதலியோடு
வாக்குவத சண்டைக்கு
பிரயச்சித்தமாக
கல்லூரி போகும் அவளை
இழுத்து சென்று
நண்பனின் அறையில் போட்டு
புணர்ந்து விடலாமென
பேருந்து நிலையத்தில்
காத்திருக்கிறான்
.
இச்சை காதலானது
தேவதை வேசியனாள்
தேவன் துரோகியனான்




தாக பிரமிளிகள்

இவள் பெரியவள்
ஆங்கில பேராசிரியை
என் குறிப்புகளின் கீற்று
புரிந்துக்கொள்ளமுடியாதவள்
என் விசாரிப்புகளை
அலட்சியம் செய்பவள்
ஒரு சேர கவனிப்பும்
ஒரு சேர என்னை
கவனிக்கமாலும்
இருப்பவள்
.
இன்னொருவள் இளையவள்
பொறியாளர் படிப்பை
தொடங்கியிருக்கிறாள்
தைரியம் அறிதலில்
பூப்பெய்தியதே சமீபத்திலென
போட்டுடைக்கிறாள்
தனக்கென பிரத்யெக அறையில்
பொழுதை கவிழ்த்திய படி
.
மற்றொருவள் சம வயது உடையவள்
தன்னை வந்தடைந்த
இரண்டு காதலை
அணுகாதுதிருக்கிறாள்
காதல் பற்றிய
சுய தெளிவுடையவள்
வெளிப்படையாக பேசி
நெருக்கமானவள்
அலட்சியம் செய்ய
கற்றுக்கொள்ளதவள்
.
முதலாமவளோடு
புத்தகங்கள் நிறைந்த
மேசையோடு கூடிய
ஒரு அறையில்
காலம் கழிக்கும் பிரமைகள்
புத்தகங்களோடு வாழ
கற்றுக்கொண்டவள்
என் பிரத்யெக விருப்புகள் பற்றி
பேச முடியாதது
வீட்டார் வரன் தேடி
யூகித்திருப்பதே
காரணமாக இருக்கலாம்
.
இளையவளோடு
எனக்கென பிரத்யெக
அறையில் கழிக்க கூடும்
அவளை வேறோரு
ஆடவன் அணுகாதிருப்பது
வீட்டார் பிரார்த்தனையாக கூட
இருக்கலாம்
.
மூன்றாமபவளுக்கு
வீட்டின் மேல்தளத்திலிருந்து
வானத்தை காதலோடு
ஒப்பீடு செய்வேன்
காதல் உறவு சார்ந்ததென
ஆடவனோடு சிநேகம்
அவள் வீட்டில்
ஒரு பொருட்டாக
எடுத்துக்கொள்ளதிருக்கலாம்
.
இவர்கள்
விம்முக்கையில் அடைக்கும்
என் தாக பிரமிளிகள்
.



Wednesday, December 5, 2012

துணையாள்

முடிவுறாத எண்ணங்களை
செப்பனிடுவளே
இதோ இரவின் தளம்
.
தேர்ந்த துணையாளனை அடைந்தவளே
இதோ என் எண்ணத்தின்
சாரம்சம்
நான் துணை
அடைக்கையில்
அவள் உடல் பகிர்தவளாக
இருக்க கூடுமோ
.
மென் அதிர்வு தடங்கள்
உன் முகத்தில்
வன் பொழிவாயோ
வார்த்தைகளால்
நான் எண்ணங்களின்
புதிய ஆக்கமாம்
.
காதலாகி கசிந்துருகி
தேர்ந்தெடுத்தவளை சேர்
அவள் நல்லாள்
என்கிறாய்

Monday, November 26, 2012

தனிமை படல்களில் தெளிந்த இரத்த துளிகள்

மின்விசிறியின் பேரிச்சரலுடன்
தனிமை சுவர்களில்
அடைப்பட்டு
விபரிதங்களால்
மிதித்து எறியப்படுகின்றதன்
கோர முகம்
.
யோனி கேசம் நீவுதல்
புடைத்தல்
மீள் நெருங்குதல்
ரணமா என்றோ
சுகித்த சாயலா
.
உமிழ் வழி தொண்டையில்
ஊறும் திடமான
எச்சில்
தேகம் பரப்பி வைக்கப்படுகின்றது
.
தடயங்கள் அழித்தல்
பின் வரைதல்
மேல் ஆடை நீக்கி
முலை திருகிய
வழிதடங்களில்
நெட்டுயர்ந்த தண்டில்
மலர் வெடித்து
இரத்த துளிகள் தெறிந்தது
தனிமை படல்களில்
.
இயல்பு திரும்பிய
பொழுது
யூகமானது

Sunday, November 18, 2012

யாசிப்பு

கால் அறுந்த
சிலந்தி ஒன்று
வலை பின்னிய
கிளை யடைய
கிளையாய் இருந்து
தவித்தேன்
அதை உற்சாகப்படுத்த
என் கத்தல்
அதற்கு கேட்பதாயில்லை
காற்றோடு சல்லாபலமிட்டு
கிளை நகர்த்தி
பயனில்லை
என் பதின்மத்தில்
நான் அதே
சிலந்தி யென
நான் தொடர்பு கொண்டவர்கள்
கிளை யென
இருந்திருக்க கூடும்
நானும் கிளை யடைய
தவித்தேன்
கிளை விருப்பமும்
என்னை வந்தடையவில்லை
புலப்படும் காயங்களின்
வலி உணரப்படமால்
நிறைவேற ஏக்கங்கள்
ரணமாகிறது
புரட்டி போட்ட
காலம் கழிய
சிறகு இழந்த
வண்ணத்துப்பூச்சி
கிளை அடைய
நான் தன்மை
இழந்திருந்தேன்


அங்கே ஒரு கடல்

சிறுகற்கள் உடல் அழுத்த
மனபிராண்டலுக்கு பின்
உணவு விழுங்கிய
பாறை துண்டு நெளிந்ததால்
விழிக்க
அந்தரத்தில் ஒரு
நீள்கூரை பரந்து கிடந்தது
அங்கு இருந்தது
ஒரு கடல்
கூதலினி
மேல் படர்தல் பற்றி
பேச கேட்ட பின்
அனிச்சையாக
நார்த்தனமாடும்
அவள் கரு விழியைப்
பார்த்தேன்
அங்கு இருந்தது
ஒரு கடல்
தளர்ந்த பாதை
முற்களின் கூடம்
அதற்கு மேல்
சுகித்த தடயங்கள்
அங்கும் இருந்தது
ஒரு கடல்

Tuesday, November 13, 2012

வார்த்தைகளின் வாசிப்பு

அவளுக்கு கவிதைகள்
மேல் மிகை விருப்பமாம்
.
சில நேரங்களில்
எழுதவும் செய்வலாம்

.
இருவரும் பரஸ்பரம்
தங்கள் கவிதைகள்
மாற்றி வாசித்து கொண்டோம்
.
மீள் வாசிப்பின் சுவராசியம்
அவள் கவிதைகளில் இல்லை
அவள் வார்த்தைகளில்
உண்டு.

இரவின் நதி


நசநசத்த பூஞ்சைகள்
மனித உடல்களில் படரும்
பகல் பொழுதுகளில்
சகிக்க முடியாதவர்கள்
தொடர்ந்து
உதறியெறிகிறார்கள்
மீள் படர்தல்
தொடர்கிறது
சகிக்காத நாற்றத்துடன்
மாலையில்
வீடு அடைகிறார்கள்
குளிர்மையோடு
இரவின் நதியில்
மிதக்கும் அவர்களின்
மேல் படர்ந்த பூஞ்சைகளை
மீன்கள் மெல்ல திங்கும்