சண்டை - கவிதை
.
என்னை சுற்றியவர்கள்
யாரும் எனக்கு அவர்கள்
சொன்னபடி நடப்பதில்லை
சில செயல்களின் மூலம்
அதிருப்தியை ஏற்படுத்துகிறார்கள்
நீயும் இப்படியே பிரதிபலித்தால்
தங்கிக்கொள்ள முடியவில்லை
என் முழு கவனமும்
உன் மேல் தான்
நீ சின்ன சின்ன எதிர்ப்பார்ப்புகளை
நிறைவேற்றாத போது
நமக்குள் சண்டை பிறக்கிறது
இதே போல் தான்
நானும் உனக்கும்
பாதி சண்டை நிறுத்தும் போது
வார்த்தைகள் தொங்கி நிற்க
என்னோடு பேசமால் இருக்க
உன்னால் மட்டும் முடிகிறது
நினைத்தால் விரக்தியாகவும்
பயமாகவும் இருக்கிறது
பெரும்பாலும் எல்லா சண்டையும்
முடிந்த பிறகும்
உன்னோடு பேசவும்
கொஞ்சவும் என்னிடம்
வார்த்தைகள் கிடக்கிறது
உன் கனத்த மௌனம் தான்
வலிக்கிறது...

Friday, August 31, 2018
ஜூன் 7 , 2015
Labels:
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment