Wednesday, December 25, 2013

தரிகாவிற்கு . . .

அன்புள்ள தரிகாவிற்கு . .
.
என்ன தான் நாம் இனி காதலிக்கலாம் முடிவு செய்தாலும் , இது காதல் தானா ஏற்றுக்கொள்ள உள்ளூர எனக்கு சந்தேகம். நீ தான் என் வாழ்க்கை முழுவதுமாக இருப்பாய் என்பதை நம்பிக்கையாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் எனக்காக நீ செய்யும் விஷயங்களில் இருந்து உன் மேல் எனக்கு துளி நம்பிக்கையும் இல்லை. காதலில் திட்டமிடல் சரியல்ல. மிஞ்சி போனால் எதற்காக உன்னை காதலிக்க வேண்டும் என்று யோசித்து பார்த்தால் , நாம் ஒரு சாதியில் பிறந்ததால் நாம் இணைய சாதி பிரச்சினை இல்லை என்பதாகப்படும். ஆனால் காதல் திருப்தி அளிக்கிற விஷயம். இந்த சில நாட்களாக அந்த திருப்தியான காதல் உன் மேல் ஏற்பட என்னையறியமால் என் மனதை நானே மாற்றிக்கொண்டிருந்தேன் யென்றுதான் நினைக்கிறேன் . மன்னிக்கவும், நீ திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இப்பொழுது தெளிவு பெறுகிறேன். அந்த உணர்வு , அந்த நம்பிக்கை எனக்குள் ஏற்பட கொஞ்சம் நாட்கள் ஆகலாம். கொஞ்ச நாட்கள் பழக அவகாசம் கொடுங்கள். மேலும் உங்களால் முடிந்திருப்பின் , எனக்காக காத்திருக்கவும். மற்றபடி உன்னை எப்பவும் பிடிக்கும். தவறாக எதாவது குறிப்பிட்டிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

Tuesday, April 23, 2013

Dream version 1.0 (காதல் புனைவு)

அவள் சரீரம் பற்றிய குறிப்பு ஒன்றை எழுதி விட்ட மாலையில் , அந்த குறிப்பின் மயக்கத்திலையே நான் பின்தொடர்ந்து சென்றதாகதான் கொள்ள வேண்டும் . அதே மயக்கத்தில் அவள் சரீரத்தை உரிமை கேட்டதிலிருந்து எங்களுக்குள்ளே பிரச்சினை. பேசி பேசி அவளுக்கு என் மீது விருப்பங்கள் குறைந்து பிரிந்த மாலையும் , எப்போதாவது விருப்பப்படும் போது என்னோடு பேசினால் போதும் யென்று அவளிடம் முடிவாக சொல்லிவிட்ட அந்த இரவு கசத்தது. பின் ஒரு கனவு , அவளே என் கையை பிணைந்து " இப்பவே பேசணும் னு தோணுது. எதுக்காகவும் பிரிய மாட்டேன் " பேசிய அவளை பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லா சண்டையும் மறந்து நாங்கள் இதமாக பேசினோம். எப்பவோ நடக்கும் அவள் தங்கை திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாக நினைவு. நல்ல ஞாபகம். " அடுத்து உனக்கு தானே அது " என்றதும் அவள் வெட்கத்தோடு கனவு அறுந்து தொடர்பே இல்லாத வேறோரு கனவிற்குள் சென்றது. விழிக்கையில் கனவில் வந்த அவள் முகத்தை பல முறை ஞாபகப்படுத்தி பார்த்தேன் வருவதாகவேயில்லை . அந்த கனவும் , அவளும் பிரிந்து விட்டதாக நான் மட்டும் தனியாக எங்கோ இருப்பது போல் உணர்வு.

Monday, April 8, 2013

She is a white girl ( காதல் புனைவு)

வெள்ளை தேக பெண் வதனமும் கூட , மௌனம் கொள்ள தெரியாது . இம்மி கணங்கள் கடப்பதற்குள் பல வார்த்தைகள் பேச அவளுக்கு தெரிந்திருக்கிறது , குறிப்பிட்டால் இனி மேல் பேசமாட்டேன் யென அவள் கூறுவதிலிருந்து அவள் அழகை கொஞ்சமாய் சிதைக்கிறாள். அவள் வதனம் நீள்வட்டம் என்கிறேன். அவள் கண்ணாடியில் பார்த்திருக்கிறாளாம் கண்டிப்பாக ஒவல் என்கிறாள். மருத்துவ தொடர்பாக படிக்கிறாள் , அதே பாடங்களுக்கு விரைவுரையாளராக தான் சேர்வாளாம் . "நீ என்னோடு வெளியில் தலைகாட்டும் போது வெள்ளை நிறத்தில் சித்திர வேலைப்பாடுகள் கொண்ட சரிகைகளோடு கூடிய சேலையை அணித்து வா , அது தான் பொருத்தம் " என்று அவளிடம் கூறி விட தோன்றுகிறது. நான் எல்லா நேரங்களில் அவளுக்கு எல்லாமுமாக இருந்து விட அவளிடம் நான் கூறுவதில் என்ன இருக்கிறது , இனி அவள் கூறுவதில் தான் இருந்து நான் இயங்குவதே.

Friday, March 22, 2013

மோட்டர் வாகனங்கள் , பிளெக்ஸ் போர்டுகள் , இராட்சத கட்டிடங்கள் .

சிலருக்கு இருப்பதைப்போல
எனக்கென ஒரு மோட்டர் வாகனம்
இருக்கிறது
நானும் அதுவும் மாறிமாறி
துரோகம் இழைப்பதற்காக
எதிர்படுவோர்களிடம் பேசிவைத்திருக்கலாம்
.
உடல் நசுங்கி கை கால் அகன்று
தலை நசுங்கி எத்தனை இழப்புக்கள்
குழந்தைகளை கூட
விட்டுவைப்பதில்லை
நாளும் பார்க்கிறோம்
வென்கியூப் நகரத்தில் தொடங்கி
பல நகரங்களில்
வாகனத்தை தலைகீழாகவும்
எப்படியும் ஓட்டுவதற்கு
ஆள் இருக்கிறது
இழப்புக்களை கண்கொள்ளமால்
அப்படியொரு முயற்சி
மரணத்தையே வென்றதாகப்படும்
அப்படி ஆக முனைப்பு
கூடுகிறது
.
சக நண்பன் விபத்தில் மாண்ட
செய்தி கேள்வியுற்று
எரியூட்டும் விழாவுக்கு
சென்றிருந்தேன்
இனி அவனை காண முடியாது
என்ற எண்ணம் மேலூங்கி
தொண்டை அடைந்து
அழுகை வர
அடக்கி கொண்டேன்
பின் நாட்களில்
பயணங்களில் நெடுங்சாலைகளில்
அவன் பிரேதம் தேடி
அழைந்திருக்கேன்
பைத்தியகாரனாக
.
நோய் வந்தால் கூட
தெரிந்த இடத்தில் மரணம்
விபத்துக்கள் தெரியாத இடங்களில்
துன்பம் இழைக்கிறது
வாகனங்களை கண்டால்
அயர்ச்சி அளிக்கிறது
அதன் ஒவ்வொரு
எந்திர பாகத்திலும்
மரணத்தின் திசுக்கள் ஒட்டியிருக்கிறது
என் மொத்த சகாப்த்தையும் அடக்கி
அதன் முன்னர்
வணங்கி விழுகிறேன்
.
என் பரிணாம பய உணர்வுகள்
சில நாட்களுக்கு முன்பு
பிளேக்ஸ் போர்டுகள் மீதும்
அதற்கும் சில நாட்களுக்கு முன்பு
இராட்சத கட்டிடங்கள் மீதும் இருந்தது.

Saturday, March 16, 2013

பேரழகி ( காதல் புனைவு )

அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். கூச்சம் யென்று சொல்லி கொண்டே நிறைய பேச அவளுக்கு தெரிந்து இருக்கிறது. நல்ல வாழக்கையை வழி கொணர பார்க்கும் என்னை , லௌகீகத்தில் விழ செய்வாள் போல. சிநேகமாய் வார்த்தைகளை இறைந்து விடும் அவளது கையை பிணைந்து நீ தான் வேண்டும் யென சொல்ல வேண்டியிருக்கிறது. என்னை உதறிவிடுவாளோ என்ற பயத்தில் விட்டுவிட்டேன்.என் எழுத்துக்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள சிரமபடுகிறாள். மேலும் , நான் கவிஞன் யென்பதையே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் , என்னை பற்றியே விபரங்கள் கேட்கிறாள். அவள் கை அசைவில் புகுந்து , நெற்றி வகிட்டால் அடைபடுகிறது என் உயிர்.