Monday, February 25, 2013

Is she think about me ? (காதல் புனைவு)

அவளும் நானும் எல்லாம் பேசி பிரிந்து விட்ட பின் , அவள் பொறியியல் கல்லூரியில் ஒன்றில் சேர்ந்திருந்தாள். அநேகமாய் இதமான மாலை வேளைகளில் , கல்லூரி கென பிரத்யேக உடையில் பேருந்து நிலையங்களில் தென்படுவள். உலகத்தில் எவ்வளவோ நல்ல உடைகள் அவளுக்கு பொருந்தலாம், அந்த கல்லூரி உடையும் உடலை பிணைந்திருக்கும் பேக் யென அவளுக்கு கொஞ்சம் ஏற்றதாக இல்லை. ஆனால் கூட அது அழகிற்கு தேசல் கிடையாது . கல்லூரி உடைகள் களைந்து சாதாரண வண்ண உடைகளில் தெருக்களில் எதிர்ப்படும் போது எதோ உணர்ந்திருக்கேன். அதை விட அவள் மாலைகளில் வீடு அடையும் இடைப்பட்ட நேரத்தில் என்னை பற்றி நினைப்பதற்கு எதுவும் கிடைக்கமால் போகுமா யென பயம் மேலூங்குகிறது. இரவு பொழுதில் அவள் தனது அறையில் வெளிச்சங்கள் செலவிட்டு படிக்கும் நேரத்தில் கூட என்னை பற்றி நினைக்கமாட்டாளா ? யென பயத்தோடு வருந்துகிறேன்.

Sunday, February 17, 2013

கிறிஸ்துவ பெண் துறவி

மாலை நேர நகர சாலையில்
ஒரு கிறிஸ்துவ பெண் துறவியை
சந்தித்தேன்
காவி நிற உடை
அவளுக்கு மட்டும்
நீண்ட கை ரவிக்கைகள்
பிரகாசமான வதனம்
பொன்னிற சிலுவை போட்ட செயின்
அகன்ற கழுத்தில்
எல்லா ஆண்களையும்
சகோதரன் யென
அழைக்க தெரிந்திருக்கிறது
சற்றென்று அவள் அறையை பற்றிய
கீற்றலாய் ஒரு எண்ணம்
காய்ந்த இலைகள்
காற்றில் உராயும்
தனிமையான பல நேரங்களை அவள்
அங்கே கடந்திருக்கலாம்.

Monday, January 7, 2013

Small thought about love (காதல் புனைவு)


யாரவது காதல் சாதக விஷயங்களை
பேச வேண்டின்
ஒரே ஒரு பெண்ணை
சார்ந்து பேசுவதாக இருக்க வேண்டும்.
நான் பார்த்தவரை சிலர்
காதல் பற்றிய பார்வையோடு
அதை அணுகியவர்கள் தான்
அதில் சறுக்கியிருக்கிறார்கள்.
இதுலென்ன புதிது தென
தினமும் சண்டையிட்டவர்கள் கூட
வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
.
நானும் வெவ்வேறு கால கட்டங்களில்
மூன்று பெண்களிடம்
காதல் மொழிந்துள்ளேன்,
மூன்றிலும் தோல்வி.
காதலையும் , திருமணத்தையும்
சேர்த்து வைத்து யோசித்ததிலிருந்து
காதல் பக்கம் திரும்பவில்லை.
நான் இன்னும் திருமணத்திற்கு
தயராக வில்லை யென்ற
எண்ணம்.
ஆனால் , எதிர்காலத்தில்
யாரேனும் ஒரு பெண்ணை பார்த்து
எல்லாமே இனி அவள் தான்
என நினைக்க நேரிட்டால்
வேறு வழி கிடையாது
காதலில் விழுந்து தான்
ஆக வேண்டும்.
.
ஒரு பெண் ஆணின்
கையை பிணைந்து
இனிமே நான் தான்
உனக்கு எல்லாமே யென சொல்வது வேறு.
நம் தேடி கண்டுபிடிச்ச
பெண் அதே உணர்வோடு
நம்ம கிட்ட சொல்வதென்பது வேறு.
இந்த மாதிரி விஷயங்களில் தான்
காதல் ஒளிந்திருக்கிறது.

Saturday, December 29, 2012

போர்னா வலைதள பெண் தேகம்

சோகத்தின் ரேகைகளென
வெயில் வெளிச்சம்
சாளரம் வழி
கணினி திரையில் விழுந்திருந்தது
.
அவன் தேடி பார்த்த
ஒரு போர்னா வலை தளத்தில்
.
அவளை சார்ந்தவர்களுக்கு
துரோகம் இழைப்பதாக இருந்தாள்
.
அவள் உடைகளோடு
சரீரமும் நனைந்திருந்தது
.
அவள் யோனி காய்ந்திருந்தது
.
பல திணுசுகளில்
அவள் வன்மையாக புணரப்பட்டாள்
.
இவன் முறையில்
.
அவள் குளிக்க நீர் வாரினான்
.
துணி அலமாரியில்
அவனுக்கு பிடித்த
சேலை யொன்றை
அவளுக்காக தேர்ந்தெடுத்தான்
.
மென்மையாக அவளை அணுகினான்
காலத்தை தாமதப்படுத்தி
.
கிளைகள் நீண்டு வளர்ந்த
ஒரு மரத்தின் கீழ் அவன் அமர்ந்திருந்தான்
.
அவள் வீடு இங்கேயே
எங்கேனும் இருக்கலாம்
.
இந்த மதிய வேளையில்
சாளரம் வழி வெயில்
அவள் சரீரத்தில் விழுந்திருக்க
தூங்கி கழித்துக்கொண்டிருப்பாள்




Monday, December 17, 2012

ஆடையில்லமால்

நிலத்தை இரு கூறாக பிரித்து
நதியாழலிருந்த என்னை
தேர்ந்தெடுத்திருந்தது
சிவந்து பழுத்த சூரியன்
சொத சொத வென
ஒப்பியிருந்தது தேகம்
மாமிசம் தின்று விட்டு
மலை முகட்டுக்கு எதிரே பறந்த
பறவையின் அலகிலிருந்து
கிளம்பிய குருதி வாசம்
எனக்கு பசியை நினைவுபடுத்தியது
உடனே நதிமீன்களை கைகளால்
பிடிக்க முயன்று தோற்றேன்
விந்து கசிந்து நனைந்த
ஆடைகளை அலச
அதை திங்க வந்த
மீன்களை ஆடைகளால்
கொய்தேன்
போதுமென கரைக்கு திரும்பி
மேலாடை அவிழ்த்து
செடிகளின் மேல்
உலர காய போடுகையில் தான்
அவன் இருப்பதையே கவனித்தேன்
அன்றிலிருந்து
மேல் ஆடையில்லமால்
அவன் முன் இருக்க
பழகி கொண்டேன்