குறித்து வைக்கிறேன்
திட்டமிட்டு
ஜாக்ராதையாக
எதிர்பார்த்தபடி
எதிர்பார்க்கமாலும்
உன்னை எப்படி
அணுகுவதென்று
.
மயிர்கால்கள் சிலிர்கிறது
கை இடுக்குகளில் வியர்த்து
சட்டை நனைந்து விடுகிறது
ஒரு விபத்துக்கு தயாராகிவிட்டேன்
Friday, September 28, 2012
Tuesday, September 25, 2012
உன் மீள் வரவு
மீந்த இந்த இரவு
குளிர் உறைகிறது
என் தேகக்கூட்டில்
கண்கள் இருள் தேடி பிசுபிசுக்க
போர்வைக்குள் முடங்க
சக பறவை கூடு அடையும்
குதூகலிப்பின்றி
உன் வரவை
அறியமால் கிடந்தேன்
மிதமான விசாரிப்புகளுடன்
தொடங்கியது நம் சம்பாஷணைகள்
நீ இல்லாத நாட்களின்
நல்லதையும் அல்லதையும்
பகிர்வதாய் தயாரனேன்
உனக்குள் ஆச்சரியங்கள்
பிளவிட்டிருக்கலாம்
உனக்கான சுவாரசியத்தின் நுனி
பற்ற வைத்த படி
காலி கோப்பையில்
முடியது எனக்கான இரவு
குளிர் உறைகிறது
என் தேகக்கூட்டில்
கண்கள் இருள் தேடி பிசுபிசுக்க
போர்வைக்குள் முடங்க
சக பறவை கூடு அடையும்
குதூகலிப்பின்றி
உன் வரவை
அறியமால் கிடந்தேன்
மிதமான விசாரிப்புகளுடன்
தொடங்கியது நம் சம்பாஷணைகள்
நீ இல்லாத நாட்களின்
நல்லதையும் அல்லதையும்
பகிர்வதாய் தயாரனேன்
உனக்குள் ஆச்சரியங்கள்
பிளவிட்டிருக்கலாம்
உனக்கான சுவாரசியத்தின் நுனி
பற்ற வைத்த படி
காலி கோப்பையில்
முடியது எனக்கான இரவு
பத்தி 2
பத்தி 2 :
.
ஒரு விஷயம் எனக்கு பிடிக்கவேயில்லை .
ஒரு சாதனையாளன் எப்போது
பிறந்தான் மற்றும் அவர்
பின்புலம் பற்றிய கேள்விகள்
அதில் எந்த சுவாரசியமும் இல்லை
தேவையும் கிடையாது
அவர் எத்தனை இடர்பாடுகள் கடந்து வந்தார்
அவர் வாழ்க்கை சுவராசியங்கள் முக்கியமாக
தெரிந்து கொள்ள வேண்டியது
.
கல்வி தேவையில்லாதை
உட்புகுத்துகிறது
தற்போதைய மாணவர்கள் சாதனையாளர்கள் சுயபுலம் பற்றி
விவரிக்கும் அளவுக்கு
அவர் செய்த சுவராசியங்கள்
பற்றி அறிவதில்லை .
Sunday, September 23, 2012
Saturday, September 22, 2012
காக்கை மனிதர்கள்
பத்தி - 1 :
.
பொதுவாக காக்கைகள் உணவுக்காக அலையும் ,
மனிதர்கள் கை ஒங்கினால் பறக்க
பாவனை செய்து பின் அமரும்.
மனிதர்களிடமும் காக்கை தனம்
ஒளிந்துள்ளது .
சாதுர்யமானவர்களின் கேலி பேச்சுகளில் அடிபடும் அப்படிபட்ட
மனிதர்கள் சம்பவ இடங்களிலிருந்து மீள
முயன்று பின் தன்
காக்கைகள் அல்ல என்பதை உணர்ந்து
எதிர்த்து பேசி திரும்பவும்
தோற்கிறார்கள் .
நானும் கூட சில நேரங்களில்
சாதுர்யமானவர்களில் வார்த்தைகளால் அடிபட்டுருக்கேன் .
விரட்டபட்டுருக்கேன் . அவர்களின் தலை மறைந்த பின்,
தன்னை விட தழைத்தவர்களை வார்த்தைகளால் விரட்டியிருக்கேன் .
அவர்களும் காக்கை தனம் கொண்டு
பறக்க பாவனை பின் செய்து அமர்வார்கள் .
அப்படிபட்ட காக்கை தனம் கொண்ட மனிதர்களை ஒரு நாளும்
பார்த்ததில்லை உணவுக்காக அலைந்ததை.
Subscribe to:
Posts (Atom)