Tuesday, July 31, 2012

உலகம் நீ

நானோ உன்னை
என்
தனியார்மயமாக்க
விரும்பினேன்
.
என்னை
நீயோ
உன்
உலகமயமாக்கல்
ஆக்கி விட்டாய்

Thursday, July 19, 2012

அன்பு ஏக்கம்

வயிற்று வலி மிகுந்து ஒரு கர்ப்பிணி நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு தொலைப்பேசி அழைப்பதாக கனவு கண்டேன் . ஏன் எதிர் காலத்தில் என் மனைவியாக கூட இருக்கலாம் அன்பின் பரிவர்த்தனைக்கு ஏங்கி வாழ சொல்கிறது

சகோதரி

திடமானதில் முட்டி உடையும் நீர்துளி யென மூத்த சகோதரி உன்னிடம் சம்பாஷணைகள் பேசி உடைகிறது மனம் . சகோதரியாகும் நீ உன்னிடம் பேச என்ன இருக்கிறது ஒரே நேரத்தில் தாய்மையும் சிநேகமும் உன்னிடம் கிடைப்பதாய் லயிக்கும் மனம்

பழி வாங்கல்

நீ என்னிடம் சொல்ல குதூகல விஷயங்கள் இருக்கலாம் எனக்கோ உன்னிடம் காட்ட விம்மி புடைத்த சில காயங்கள் இருக்கலாம் யார் முதலில் சொல்லும் முனைப்புடன் சம்பாஷனைகளிடம் நீயே சொல் யென ஆசுவாசம் கொள்கிறேன் உன் மகிழ்ச்சி செய்திக்காக நான் என் குதூகலத்தையும் காட்ட வேண்டிய நிர்பந்தம் உன் வாய் சிரங்கள் கால்கள் கட்டி மண்தாரையில் உன் உடலை இழுத்து வந்து இருளில் போட்டு உன் சுவாச குழலை அறுக்க வேண்டும்

சூரியன்

ஆச்சரியமென்ன அமெஷிங் இந்த சூரிய கோலி குண்டு மறு வீடு வந்தவன் பொல தினமும் கோபித்து கொள்கிறது