Sunday, July 8, 2012

நிலா

காலை நேரங்களிலும் கூட
எந்தவோரு வானிலையையும்
காட்டமால்
அம்மா
வட்டக்கல்லில்
நிலவை சூடுவதோடு இன்றி
அதை இரண்டாக
மடித்து விடுகிறாள்
.
எப்போழுவதாவது
மஞ்சள் கலவையோடு நிலவை
பார்த்ததுண்டு
.
பிறகு வெள்ளை கலவையோடு
நிலா எப்போழுதாவது
.
சில நேரங்களில்
கருக்கி விடுகிறாள்
அப்போழுது
அமாவாசையென
நினைத்து
கொள்கிறேன்.

முதல் காதல்

என் முதல் காதல்
பற்றி கேட்கிறார்கள்
.
என் பால்ய பருவத்தில்
ஒரு நடிகையின்
முக அசப்பில்
சைக்கிளில்
என் வீட்டை
அடிக்கடி
கடந்து போன
ஒரு மூத்த சகோதரியை
முதல் முறையாய்
காதலித்தேன்
.
இப்பவும் கூட
தேவையான நேரங்களில்
அவளை காதலிக்கிறேன்

சாமான்ய மனிதன்

சாதனைகளோடு
கட்டி புரளும்
மனிதர்களிடம்
விசித்திரம்
சுழல்வதாய்
அவநவம்பிக்கை
கொள்கிறேன்
.
அவர்களும்
சாமான்ய மனிதன்
என்பதை
மறந்து விடுகிறேன்

நிராகரித்து விடாதே

உன்
எண்ணங்களுக்கு
ஈடாக
ஒடிக் கொண்டிருக்கிறேன்
.
ம்ம்ம்
நிராகரித்து விடாதே

ஒடுதல்

நடத்தல்
ஒடுதல்
வித்தியாசம்
காண முயல்கிறேன்
.
உடல் சார்ந்த
ஒடுதலை
ஒடுதல் என்று
சொல்லிட முடியும்
.
முழுமை பெறவில்லையே
என உணர்கிறேன்
.
நீங்கள் உங்கள்
கற்பனைகளையும்
இழுத்து கொண்டு
ஒடவில்லையே