" புரிந்து கொள்வது " என்றொரு வார்த்தை. "இவன் இதை செய்ய மாட்டான் ", "இவனால் அது முடியாது" விட்டுக்கொடுப்போம். குடும்பங்களில் உணர்வுபூர்வமாக இது வெளிப்பட்டாலும், நண்பர்களிடம் வினோதமாக வெளிப்படும். இங்கே எப்படி யென்றால் - "பாக்கெட்ல பத்து ரூபாய் கூட இல்லை. நீ எனக்கு
400 ரூபாய் தரனும். உன் நிலைமை எனக்கு புரியுது. ஆனா இப்பவே கொடுத்தா நல்லது. முடியல கண்டிப்பாக அந்த 400 ரூபாய்க்கு மேலே உனக்கு செலவு வைப்பேன்.."
நட்சத்திரா
Sunday, September 16, 2018
Fb Status
Saturday, September 15, 2018
பழைய உறவுகளில்
ஏமாற்றத்தையும், துரோகத்தையும்
சந்தித்து பக்குவப்பட்டேன்
புதியதாய் நாம்
சந்திக்கிறோம்
உன் சிரிப்பு
இங்கு மகிழ்ச்சியை
நம்பிக்கையை
ஆழமான தெளிவை
தருகிறது
இத்தனை நாள்களின்
வலிகளுக்கு காயங்களுக்கு
தனிமைக்கு
களிம்பு இடுவதாய்
உன் வரவு
நாம் கைகளை கோர்க்கிறோம்
நாம் இங்கு தொடங்குகிறோம்
அழகான புதிய வாழ்வை
தேடியது ஏதோ ஒன்றை
கிடைத்ததை
Thursday, September 6, 2018
விசனம்
சிறிய விஷயங்களை செய்யும்போது என் கவனம் வர வர மலுங்கி வருகிறது. இது முன்னே இருந்து அப்படிதான். ஒரு விசயத்தை எப்படி முடிபது? எதற்காக செய்கிறோம் ? எப்படி செய்தால் வேலை எளிது.? என்பது எல்லாம் வரவே மாட்டேன் என்கிறது. கவனம் இல்லை, பயம், ஞாபக மறதி, பொறுமை இல்லாதது. சிறிய விசயங்களை பொறுத்த வரை மட்டும். பெரிய விசயங்களில் போதும் நல்ல கவனம் இருக்கிறது. சிறிய விசயத்தை தவறினால் திரும்ப செய்யலாம் என்ற அலட்சியம். நிர்வாகத்தில் இது சறுக்கை ஏற்படுத்தும். சில உதாரணங்கள் : கடைக்கு போகிறேன் காய்கறிகள், மாசாலா வாங்கிறேன். அரிசி வாங்க மறதி வந்தது. ஒரு இரவு XL இரவல் வாங்கி ஹோட்டல் சென்றேன். பார்சல் வாங்கி விட்டு வேறோருவர் XL ஐ சாவி போட்டு எடுக்க பார்த்தேன், அதற்குள் விஷயம் உணர்ந்து விழிப்புக்கு வந்தேன். வேலை தொடர்பாக பேசுகையில், இரண்டு முறை விளக்கம் கேட்டு செய்கிறேன். இது பெரும் தவறு. இது எங்கே போய் முடிய போகிறது என்று தெரியவில்லை.
Tuesday, September 4, 2018
என் காதல்
சுயம் கவிதைகள்
கோபம் படறதுனே தெரியல.
.
சிம்பிள்.
கோபம் வந்தா
கோபம் படு ....
ஓலட்டது மனசு
அதுவும் புதுசா
எதாவது பிரச்சினை
வர வரைக்கும் தான்
அதுக்கு அப்பறம்
முன்னாடி நடந்த
பிரச்சினை பத்தி
ஏன் னெ கூட
கேட்கமாட்டிங்குது...
அதுக்கு வேற வேலையில்லை
உனக்கு வேலையிருக்கா ?
நீ செய்
நான் செய்ச எல்லா தப்பும்
அவன் செய்யனும்
அப்போ தான்
நானும் இன்னும்
நிறைய தப்பு
செய்ய முடியும்
மழையில் நனைய பிடிக்காது.
தூக்கி எறியலாம் தோணுது
என்னையும் கூட.....
அடுத்தவனிடம் கண் மூக்கு வாய் வாங்கி
அவனை போல ஆக முடியாது...
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன் கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது.