Saturday, March 2, 2013

She is an english lecturer ( காதல் புனைவு )

அவளோடு நல்ல பழக்கம் எற்பட்ட
சில நாளிலே ,அவளை
பெயர் சொல்லி அழைக்கும்
உரிமை எடுத்ததில்
அவளுக்கு நெருடலாக இருந்திருக்கலாம்.
எப்படியானலும் ஐந்து வயது இளையவன்
அப்படி அழைப்பதை
எந்த பெண்ணும்
ஏற்றுகொள்ளமாட்டார்களே ?
எனக்கு சில காரணம் இருந்தது.
அவள் வார்த்தைகள்
என் கவிதைகளுக்கு கொஞ்சம் தேவைப்பட்டது.
வெளிப்படையாக
அவளிடம் சொல்ல முடியாத பிரச்சினையும் கூட . . .
.
" புத்தகங்கள் நிறைந்த அலமாரியோடு கூடிய
என் பிரத்யேக அறையில்
ஒரு நாளில் அவளோடு பேசி கழிவதாகவும் ,
அந்த நேரத்தில் கூட
அவள் வீட்டில் அவளுக்கு தேர்ந்த
வரன் தேடி யோசித்துக்கொண்டிருக்கலாம் "
என்று புனைவாக ஒரு
கவிதையில் எழுதியிருந்தேன் .
அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம்.
அது எந்த மாதிரி உணர்வு யென்று
எனக்கு தெரியாது.
அன்றிலிருந்து எங்கள் உறவு
வலுப்பட்டிருக்கலாம்.
.
அவளுக்கு இரண்டு அக்கா.
ஒருவள் உள்ளூர்
கம்பெனி அலுவலகத்திலும் ,
மற்றொருவள் ஐடி கம்பெனியிலும்
வேலைபார்ப்பதற்காக சொன்னாள் .
அதை விட , அவள் அக்காக்களிடம்
என்னை பற்றி சொல்வதற்கு
விஷயம் இருக்கிறது
என்பதை அவள் ஒப்புக்கொண்டதிலிருந்து
அவள் பெயரை சில கணங்களுக்கு மீள் நினைவுறுத்தி
நனைந்துக்கொண்டிருந்தேன்.
.
நான் ஸ்டூடென்ட் என்பதிலிருந்து ,
நான் சந்தித்த சில லெக்சரரிடம் ,
" நீங்க அழகாக இருங்கீங்க " யென சொல்லமுடியாது
ஆனா இவளிடம் சொல்ல முடியும் என்பதிலிருந்து,
கொஞ்சம் அன்பும் கொஞ்சம் கண்டிப்புடன்
சிலரை வழிகாட்டும் அவள் வாழ்க்கையில்
நான் இருப்பதாய் நினைக்கையில் ,
நெருப்புக்குள் குளிர்காய்வதாய் உணர்வுகள் .
.
காதலிக்கிறேனா ? யென தெரியாது .
காதலுக்கு திட்டமிடல் சரியல்ல.
ஒருவேளை அவள் இங்கிலீஷ் லெக்சரர் ஆக
இல்லமாலிருந்தால்
பெரிதாக அவள் மேல் ஆர்வம் ஏற்பட்டிருக்காது.
A love from default profession . . .

1 comment:

  1. காதலின் மெல்லிய உணர்வுகள் இழை பிசகாமல் பதிவாகியிருக்கின்றன நட்சத்திரா! அருமை!

    ReplyDelete