Friday, March 22, 2013

மோட்டர் வாகனங்கள் , பிளெக்ஸ் போர்டுகள் , இராட்சத கட்டிடங்கள் .

சிலருக்கு இருப்பதைப்போல
எனக்கென ஒரு மோட்டர் வாகனம்
இருக்கிறது
நானும் அதுவும் மாறிமாறி
துரோகம் இழைப்பதற்காக
எதிர்படுவோர்களிடம் பேசிவைத்திருக்கலாம்
.
உடல் நசுங்கி கை கால் அகன்று
தலை நசுங்கி எத்தனை இழப்புக்கள்
குழந்தைகளை கூட
விட்டுவைப்பதில்லை
நாளும் பார்க்கிறோம்
வென்கியூப் நகரத்தில் தொடங்கி
பல நகரங்களில்
வாகனத்தை தலைகீழாகவும்
எப்படியும் ஓட்டுவதற்கு
ஆள் இருக்கிறது
இழப்புக்களை கண்கொள்ளமால்
அப்படியொரு முயற்சி
மரணத்தையே வென்றதாகப்படும்
அப்படி ஆக முனைப்பு
கூடுகிறது
.
சக நண்பன் விபத்தில் மாண்ட
செய்தி கேள்வியுற்று
எரியூட்டும் விழாவுக்கு
சென்றிருந்தேன்
இனி அவனை காண முடியாது
என்ற எண்ணம் மேலூங்கி
தொண்டை அடைந்து
அழுகை வர
அடக்கி கொண்டேன்
பின் நாட்களில்
பயணங்களில் நெடுங்சாலைகளில்
அவன் பிரேதம் தேடி
அழைந்திருக்கேன்
பைத்தியகாரனாக
.
நோய் வந்தால் கூட
தெரிந்த இடத்தில் மரணம்
விபத்துக்கள் தெரியாத இடங்களில்
துன்பம் இழைக்கிறது
வாகனங்களை கண்டால்
அயர்ச்சி அளிக்கிறது
அதன் ஒவ்வொரு
எந்திர பாகத்திலும்
மரணத்தின் திசுக்கள் ஒட்டியிருக்கிறது
என் மொத்த சகாப்த்தையும் அடக்கி
அதன் முன்னர்
வணங்கி விழுகிறேன்
.
என் பரிணாம பய உணர்வுகள்
சில நாட்களுக்கு முன்பு
பிளேக்ஸ் போர்டுகள் மீதும்
அதற்கும் சில நாட்களுக்கு முன்பு
இராட்சத கட்டிடங்கள் மீதும் இருந்தது.

4 comments:

  1. இந்த பய உணர்வுகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை என்றே தோன்றுகிறது. என்ன... இப்படி அழகாகச் சொல்லத்தான் தெரிவதில்லை என் போன்றோருக்கு!

    ReplyDelete
  2. வணக்கம்!


    வணக்கம்!

    வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளீா்!
    வாழ்த்துக்கள்!

    அழகிய சொற்களில் ஆக்கிய பாடல்
    பழம்போல் சுவையைப் படைத்து

    ReplyDelete
  3. அருமை...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_23.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
  4. வணக்கம்

    22,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete