Thursday, March 14, 2013

அவள் வதனத்தில் வளர்ந்த என் பதின்ம மரம்

என் பதின்மங்களில்
வெயிலோடு ஒட்டிக்கொண்டிருந்தேன்
எனக்கு உகந்த காலமென்று
தொலைப்பதே மீள் தேடலுக்கு தான் யென
கடந்து வந்திருக்கையில்
எல்லாமுமாக ஒரு பெண்
வந்திருந்திருந்தாள்
அவள் வதன நிழலில்
இளம் பச்சை இலைகளை கொண்ட
தாவரத்தை வளர்த்தேன்
பச்சை கனிகள்
இலைகளுள் மறைந்தது
உதிரும் முதிர் இலைகளை
அள்ளி வீசியெறிந்தேன்
அங்கே கூடுயிடும்
பறவைகளை கண்டு
மகிழ்வுற்றேன்
பின் நாளில்
அவளும் அதே தாவரத்தை
வளர்த்தாகவும்
சில நாட்களில் தளர்ந்துவிட்டதாக
ஒரு இரவில்
கேள்வுயுற்று அதிர்ந்தேன்.

3 comments:

  1. வதன நிழலில் இளம்பச்சை இலைத் தாவரத்தை வளர்த்தேன். - சூப்பர்! அவளும் அதே வளர்த்து ஓரிரவில் அழித்து விட்டாள்...! கவிதையிலேயே ஒரு குறுங்கதையும் ஒளிந்திருக்கிறதே! உணர்வுகளை மீட்டிய கவி வரிகளுக்கு என் கைதட்டலுடன் கூடிய பாராட்டு!

    ReplyDelete
  2. வித்தியாசமாக உள்ளதே.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete