Monday, December 17, 2012

ஆடையில்லமால்

நிலத்தை இரு கூறாக பிரித்து
நதியாழலிருந்த என்னை
தேர்ந்தெடுத்திருந்தது
சிவந்து பழுத்த சூரியன்
சொத சொத வென
ஒப்பியிருந்தது தேகம்
மாமிசம் தின்று விட்டு
மலை முகட்டுக்கு எதிரே பறந்த
பறவையின் அலகிலிருந்து
கிளம்பிய குருதி வாசம்
எனக்கு பசியை நினைவுபடுத்தியது
உடனே நதிமீன்களை கைகளால்
பிடிக்க முயன்று தோற்றேன்
விந்து கசிந்து நனைந்த
ஆடைகளை அலச
அதை திங்க வந்த
மீன்களை ஆடைகளால்
கொய்தேன்
போதுமென கரைக்கு திரும்பி
மேலாடை அவிழ்த்து
செடிகளின் மேல்
உலர காய போடுகையில் தான்
அவன் இருப்பதையே கவனித்தேன்
அன்றிலிருந்து
மேல் ஆடையில்லமால்
அவன் முன் இருக்க
பழகி கொண்டேன்

No comments:

Post a Comment