Wednesday, December 5, 2012

என் நாவலில் இருந்து ஒரு பக்கம்

என் நாவலில் இருந்து
பக்கம்
.
பளிங்கு தரையில்
செத்துக்கொண்டிருக்கும் அந்த சடலத்தை
வைக்க வேண்டாம் யென
வாக்குவாதங்கள் நடக்கின்றது
பார்வையாளர்கள் எந்நேரமும்
அனுமதிக்கப்படுகின்றார்கள்
அவர்ளின் ஒருமித்த
அனுதாபம்
" உழைச்ச உடம்பு
இப்புடி கிடக்கே "
உண்மையும் கூட...
ஆனால் அதுமட்டுமில்லை
அவள் துஷ்டம் செய்தவள்
அந்த துஷ்டம்
இழுத்து வைத்திருக்கிறது
அவள் உயிரை
அவளை தூக்கி
போட்டு புதைத்த பின்
இப்படி எழுத வேண்டும்
" துஷ்டம் செய்யாதே "
.
ஒரு இளையவள்
பற்றிய விஷயம்
அவள் என்னோடு
பேசுக்கையில்
அண்ணா வென்று
அழைக்கவே
பழகி கொண்டாள்
அவளை தோழியாக
அடைய முடியமால் மனம் வருந்தினேன்
அவளை அபகரிப்பு செய்யும் மன உந்துதலில்
வேறோரு தொலைப்பேசி
இலக்கத்திலிருந்து அவளை
அணுகினேன்
சுய விசாரிப்புகளில்
அவளை விட
ஒரு வயது இளையவன் யென
பொய் உரைத்தேன்
இந்த முறை
அவளை அக்காவென்று அழைக்க வேண்டுமாம்
என் நிலைமையை
நானே நொந்துக்கொண்டேன்
உறவு முறை பகுத்தவனின்
தூக்கிலிட வேண்டும்
தொலைந்து போகட்டும்
அவள் நம்பிக்கை கூரிய உறவாகலாமென்றால்
முதலில் அவளுக்கே
அவள் மேல்
நம்பிக்கை இல்லையாம்
.
நான் பயத்தோடு
நடுங்கிய குரலில்
பேசிய தொலைப்பேசி உரையாடலை
பதிவு செய்து நண்பர்களிடம்
காண்பித்து விட்டான்
மற்றொரு நண்பன்
நான் மனம் குறுகி
நண்பர்கள் முகம்
பார்க்க முடியமால்
தள்ளாடினேன்
அடிக்கடி சொல்லி காட்டி
சிரிக்கிறார்கள்
இதே போல்
கேலி விளையாட்டு
இதற்கு முன் அவர்களுக்கு
நிகழ்ந்திருக்கிறது
இப்போது தான்
நினைவுகூர்ந்தேன்
இச்சம்பவத்தின் மீள் நினைவு
நண்பர்களின் மனதில்
ஏற்படமால் இருக்க
தள்ளிபோடுமா காலம்
.
ஒரு மணமான
வெள்ளைக்காரியிடம்
நல்ல பழக்கம்
ஏற்பட்டிருந்த ஒரு நாளில்
அவளுடைய உரையாடல்களை
தொகுத்து
ஒரு ஆடவனுக்கும்
வெள்ளைக்காரிக்கும்
விடுதியில் ஏற்படும்
காதல் கதையாக
எழுத போகிறேன்
என்றேன் அவளிடம்
கீரிச்சிட்டு பறவை மொழியில்
திட்டி மறுத்து பேசினாள்
இதற்காக
வேறொரு பெண்ணை
அணுகி கொள் யென
என் நட்பை
தூண்டித்து விட்டாள்
.
நான் தினமும்
டீ குடிக்க பழகிக்கொண்டவன்
ஒரு மாறுதலாக
காபி குடித்தேன்
நிறுத்தி குடிக்க
வழக்கத்தை விட
கொஞ்சம் நேரம்
தாமதமானது
இதே போல்
இது வரை
காபி குடித்து விட்டு
மாறுதலுக்கு
டீ குடித்தால்
இதே தாமதம்
ஏற்பட்டிருக்குமோ

No comments:

Post a Comment