Sunday, November 4, 2012

என்னுடைய "என் இரவுகளை காலி செய்பவள் " நாவலில் இருந்து ஒரு பக்கம்

மெல்லிசான குரலில் வணங்கினாள்.
நான் ஒழுங்கற்ற காகிதங்களை
அடுக்கி வைப்பதில்
மும்மராக இருந்தேன்.
தலையாட்டினேன்
கொஞ்சம் தாமதமாக.
" என்னோடு பேசலாமா
வேண்டாமா என யூகிக்கிறாயா ...?" என்றாள். அவள்
வார்த்தைகளால் சில்லிட வைத்தாள்.
தசைகள் சுலபமாகி விடுத்து
சிறு பறவையென
குதூகலமாய் பறப்பதாய்
உணர்ந்தேன்.
உடனே அவள் சொல்வதை மறுந்தேன்
சந்தேகமில்லை தெளிவான மறுப்பு.
அதற்கு மேல் அவளுக்கு
பேசுவதற்கு வார்த்தைகள் பிடிபடவில்லை.
நானே தொடர்ந்தேன்.
" உன் பயணங்கள் பிறருக்கு பயன்பட
ஏதேனும் கொள்கை இருக்கிறாதா ? " என்றேன்.
"ம்ம்ம் .... இல்லை " என்றாள் மலைப்பாக.
"ஆனால் எழுதுவதற்கு ஆசை இருக்கு "
"உன்னை போல் எழுதுவதற்கு
சில காலம் ஆகும் " என்றாள்.
"சிலருக்கு என் எழுத்துக்கள்
குப்பையாக தோணலாம்" என்றேன்.
"அப்படியிருக்காது " மறுத்தாள்.
" உன் எழுத்துகளில் நீ
விசித்திரம் கூட்டுகின்றாய் " என்றாள்.
"ம்ம்ம்... " என்றேன்.
நான் சில உத்திகளை
கற்று தந்தேன்.
"உடனே செய் " என்றேன்.
"அலுப்பாக இருக்கிறது. நாளைக்கு பொருந்தி
அமர்ந்து எழுதுகிறேன் " என்றாள் கொஞ்சலாக.
சில நேரங்களுக்கு நானும்
அவளும் மௌனங்களால்
கட்டுண்டோம்.
"ஏதேனும் வேலை இருக்கிறதா .? " என்றேன்.
"சொல்லு "
"எதுவும் இல்லை "
"ம்ம்ம் ... "
"இன்னும் நான் உன்னை பற்றி முழுதாக அறியவில்லை .? " என்றேன்.
அவள் பேசவில்லை.
அதே மௌனம்.
அவள் பழகிவிட்டாள்.
அவள் கனத்த மௌனம்
வலித்தது.

1 comment:

  1. அட... ப்ளாக்கிலும் இருக்கிறீர்களா? நீங்கள் தந்திருககும் இந்தப் பகுதி அருமையா இருக்கு. எழுத்து நடை அருமை. எனக்கு முழுமையாப் படிக்க ஆவல் ஏற்பட்டிருக்கு. எந்தப் பதிப்பகம். என்ன விலை. எங்க கிடைக்கும? சொல்லுங்க ப்ளீஸ்.

    ReplyDelete