Tuesday, July 10, 2012

காதல் கவிதைகள் பத்து

என்
கையளவு
மனம்
லயிக்கும்
இடம்
உன்
விரலளவு
நெற்றிச்
சந்தனமும்
குங்குமம்
.
என் காதல்
கூட்டி
உனக்காக
உன்னதமென
கட்டிடம்
அமைக்க மாட்டேன்
உன் மேல்
நான்
கட்டிய காதல்
அதை விட
பெரியது
.
குவளையில் நீரை
நிறைப்பதைப் போல்
உன்னை
நிரப்பி வைத்துருக்கின்றேன்
உனக்கு
தாகமே எடுப்பதில்லை
எனக்கு
தாகமே தீர்வதேயில்லை
.
நான் செடி
நீ மண்
ஆகவே
நான்
வற்றி
வாடினாலும்
உனக்கு
கவலை
இல்லை.
.
நீ
என்னிடம்
செய்யும்
ஒவ்வோரு
குறும்பு தனத்தின்
பின்னணியிலும்
ஏதும்
தெரியததாது
போல்
எங்கோ
பார்க்கும்
உன்
மை விழிகள்
கண்டு
நீதான் என்று
நான்
அறிந்துக் கொண்டாலும்
"என்ன ஆச்சு ?"
என்று அறியாதது
போல்
உன் நடிப்பு
எனக்கு
வரவே வராது
.
நீ
குடிப்பெயரும்போ து
வாங்கமால் விட்டுச்சென்ற
இசை தட்டை
நான்
இப்பொழுதெல்லாம்
கேட்பதில்லை
ஏனென்றால்
மெல்ல இசையோட்டத்தால்
உன் நினைவுகளால்
நான் அழுதே விடுகிறேன்
.
என் அனுமதியின்றி
என் பொருட்களை
எடுக்கும்
நண்பர்களை
கோபத்தில்
திட்டி விடுகின்றேன்
நீ எனக்குள்
புகுந்து எதையோ
உருவி செல்வதை
பார்த்தும் என்னால்
கண்டிக்க
முடியவில்லை
.
மழை துளிகள்
உன் மேல்
விழுக யாசிக்க
கடின மழைக்கு
நீயே
காரணம்
.
உன் முகம்
பார்க்கமால்
கிடக்கும்
என்னிடம்
காதல் பற்றி
கேட்கிறார்கள்
முகத்திற்காக ஏங்குவது
என்று சொல்லட்டுமா.
.
கடற்கரை மணலில்
அமர்ந்து பேசி
விடை பெறும் போது
பின்புற சேலை மணலை
மெழுகு கைகளால்
உதறி ஏறிவாள்
அத்தோடு
என் பேச்சையையும் என
பின்னாளில் தான்
அறிந்து கொண்டேன்

No comments:

Post a Comment